இப்போ தும்முனா தான் சரியா இருக்கும்! பாமகவை தூக்கிக் கொண்டாடும் தவெக! விஜய் போட்டு வைத்த கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் நிலையில் மாற்று ஏற்பாடுகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது தமிழக கட்சி கழகம். குறிப்பாக பாமகவின் ஆதரவை பெற விஜய் விரும்புகிறார். அதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் பாமகவை தூக்கி வைத்து பேசி இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. திமுக பக்கம் எக்காரணம் கொண்டும் அந்த கட்சி செல்லக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது தமிழக வெற்றி கழகம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இடைத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் தேர்தலுக்கான பரபரப்பாகி வரும் நிலையில், நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார் ஆதவ் அர்ஜுனா.

TVK PMK Aadhav Arjuna

குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் அவரது மகன் குறித்தும் வெளிப்படையான விமர்சனங்களை முன் வைத்தார். அவரது பேச்சில் கவனிக்க வேண்டியது பாமகவை பற்றிய பேச்சை தான். கடந்த தமிழக சட்டசபை தேர்தலில் பாமக அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அதிமுக 47 தொகுதிகளில் மட்டும் தான் வென்றது. இருந்த போதும் வன்னியர் வாக்குகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் தான் அதிமுக வென்றதாக தரப்புகள் சொல்கின்றன. அதே நேரத்தில் பாமக போட்டியிட்ட தொகுதிகளில், அதிமுக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டும் பாமகவினரால் முன்வைக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி காப்பாற்றவில்லை என்பதால் அதிர்ச்சியில் இருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி.

அதை குறிப்பிட்டு பேசிய ஆதவ் அர்ஜுனா பாமக இல்லை என்றால் அதிமுக இத்தனை தொகுதிகளில் வென்றிருக்காது என கூறியிருந்தார். அதிமுகவை விமர்சிக்கும் அதே நேரத்தில் பாமகவை தூக்கி வைத்து பேச வேண்டிய காரணம் என்ன என விசாரித்த போது, அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் கிடைத்தன. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக வெற்றி பெற்றாலும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறார். காங்கிரஸ் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு இரண்டு தலா இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதே நேரத்தில் பொதுவெளிகளிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் அறிக்கை வாயிலாகவும் விஜய் அரசை தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

குறிப்பாக பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரத்தில் கம்யூனிஸ்டுகள் நேரடியாக போராட்டத்தில் குதித்திருப்பது விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதும் விஜய் செல்வாக்கை சற்று சரிய வைத்துள்ளது. கூட்டணி கட்சிகளின் அருப்தியை விஜய் சம்பாதித்திருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இதன் காரணமாக மாற்று வாய்ப்பாக பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் ஜருராக தொடங்கி இருக்கிறது என்கின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியவருடன் சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் பேசி வருகிறார்களாம். அதற்கு முன்னோட்டமாகத்தான் பாமகவை புகழ்ந்து பேசி இருக்கிறார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+