பூரண மதுவிலக்கு ஒன்றே குறிக்கோள்! பாமகவுடன் கைகோர்க்கத் தயார்! வேல்முருகன் வைத்த ட்விஸ்ட்!
சென்னை: பூரண மதுவிலக்கு ஒன்றே குறிக்கோள் என்றும் இதற்காக பாமக உட்பட எந்தக் கட்சியோடும் இணைந்து செயலாற்றத் தாம் தயார் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மதுவில்லா தமிழகம் உருவாக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் கள்ளச்சாராயமோ, நல்ல சாராயமோ மொத்தத்தில் சாராயத்தை ஒழிக்க வேண்டும் என்பது தனது நிலைப்பாடு எனவும் கூறியிருக்கிறார்.

திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறீர்களா என்ற செய்தியாளர் கேள்விக்கு, கூட்டணிக்கும், மதுவிலக்குக்கும் சம்பந்தமில்லை என பளிச் பதிலளித்தார்.
தமிழ்நாட்டில் ஒரு சொட்டு கூட மது இருக்கக் கூடாது என்பதே தனது கட்சியின் நிலைப்பாடு என்பதால் இதற்காக அதிமுக, பாமக, நாம் தமிழர், என எந்தக் கட்சியுடனும் இணையத் தயார் என ஓபனாக அறிவித்துள்ளார்.
ராமதாசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாமகவிலிருந்து விலகிய வேல்முருகன் தனியாக கட்சி தொடங்கி நடத்தி வரும் நிலையில், முதல்முறையாக பாமகவுடன் இணைந்து செயல்படத் தயார் என அவர் அறிவித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
வட தமிழ்நாட்டில் ராமதாசும், வேல்முருகனும் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ள நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து செயலாற்றினால் அது அரசியல் களத்தில் திருப்பு முனையாக அமையக்கூடும்.
திமுக கூட்டணியில் வேல்முருகன் கடும் அதிருப்தியில் இருந்து வருவது பல்வேறு நிகழ்வுகளின் மூலம் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம், சட்டசபையில் பேச வாய்ப்பு மறுப்பு, என்.எல்.சி., மதுவிலக்கு என பல விவகாரங்களில் திமுக அரசு எடுக்கும் முடிவுக்கு முரணாக நின்று எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார் வேல்முருகன்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications