எழும்பூர்.. திமுகவின் இரும்புக்கோட்டை.. தவெக ராஜ்மோகனுக்கு ‘டெபாசிட்’ கிடைப்பதே சவால்.. ஏன்?
சென்னை: சென்னை எழும்பூர் தனி தொகுதியில் தவெக சார்பாக ராஜ்மோகன் போட்டியிடுகிறார். அவர் அங்கே டெபாசிட் பெறுவதே கடினம் என்கிறார்கள் கள நிர்வாகிகள். அதற்கு பின் முக்கிய காரணம் உள்ளது.
சென்னையின் இதயப்பகுதி என வர்ணிக்கப்படும் எழும்பூர் (தனி) தொகுதி, இப்போது தமிழக அரசியலின் ஹாட் ஸ்பாட். காரணம், இங்கே களம் காணும் வேட்பாளர்கள் மற்றும் கடந்த கால தேர்தல் தரவுகள் சொல்லும் அதிரடி உண்மைகள்.
திமுகவின் அசைக்க முடியாத 'கோட்டை'
எழும்பூர் தொகுதியின் வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், அது அறிவாலயத்தின் கோட்டை என்பது புரியும். 1967 முதல் இன்று வரை நடந்த தேர்தல்களில், வெறும் இரண்டு முறை தவிர (1980-ல் காங்கிரஸ் மற்றும் 2011-ல் தேமுதிக), மற்ற அனைத்து முறையும் உதயசூரியனே இங்கே உதித்திருக்கிறது. அதிலும் 2011ல் 2ஜி விவகாரம் காரணமாக ஏற்பட்ட அலையில் தோல்வி அடைந்தது திமுக.
கடந்த கால தரவுகள் சில:
2021 தேர்தல்: திமுக வேட்பாளர் இ.பரந்தாமன் 68,832 (58.3%) வாக்குகள் பெற்று, சுமார் 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி 25%-ல் சுருங்கியது.
2016 தேர்தல்: பலமுனைப் போட்டி இருந்தபோதும், திமுக 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் கோட்டையைத் தக்கவைத்தது.

1996 தேர்தல்: பரிதி இளம்வழுதி இங்கே 72.5% வாக்குகளை வாரிக் குவித்து சாதனை படைத்தார்.
இந்தத் தரவுகள் சொல்லும் செய்தி ஒன்றுதான்: வேட்பாளர் மாறினாலும், எழும்பூர் வாக்காளர்களின் முதல் சாய்ஸ் எப்போதும் திமுகதான். இப்போதும் திமுக சார்பில் எம்எல்ஏ ஐ பரந்தாமனுக்கு பதில் தமிழன் பிரசன்னா களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், கட்சி இயந்திரம் செம ஸ்பீடில் வேலை செய்கிறது.
தவெக - ராஜ்மோகன்: 'டெபாசிட்' தப்பிக்குமா?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் இங்கே களமிறக்கப்பட்டுள்ளார் ராஜ்மோகன். ஊடக வெளிச்சம், இளைஞர்களின் ஆதரவு எனப் பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டாலும், எழும்பூரின் தரைமட்ட அரசியல் யதார்த்தம் வேறாக இருக்கிறது.
வாக்கு வங்கி அரசியல்: எழும்பூர் தொகுதியில் கணிசமாக உள்ள தலித் மற்றும் சிறுபான்மையின வாக்குகளைப் பிரிப்பது என்பது தவெக-வுக்கு இமயமலைச் சவால்.
கட்டமைப்பு பலவீனம்: அரை நூற்றாண்டு காலமாகக் கிளைக்கழகங்கள் வரை வேரூன்றி இருக்கும் திமுகவின் கட்டமைப்பை, இப்போதுதான் முளைத்துள்ள தவெக எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
டெபாசிட் பயம்: கடந்த 2021-ல் மநீம, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்தனியாக நின்றும் 5% முதல் 8% வாக்குகளைத் தாண்ட முடியாமல் திணறின. அதே நிலைதான் ராஜ்மோகனுக்கும் ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். குறைந்தது 16.6% வாக்குகளைப் பெற்றால்தான் டெபாசிட்டாவது தப்ப முடியும். ஆனால், திமுகவின் 'ஸ்ட்ராங் ஜோன்' என்பதால் அதுவே ராஜ்மோகனுக்குக் குதிரைக் கொம்புதான்.
திமுக வேட்பாளர் மாற்றம் சில சலசலப்புகளை உருவாக்கினாலும், எழும்பூரின் பாரம்பரிய 'உதயசூரியன்' விசுவாசத்தை அது சிதைக்காது என்றே தோன்றுகிறது. ஒருவேளை வாக்குகள் பிரிந்தால் அது அதிமுக-வுக்கு வேண்டுமானால் சிறு வாய்ப்பைத் தரலாமே தவிர, தவெக-வுக்கு இங்கே இடமில்லை என்பதே எதார்த்தம்.
ஆக, 'எழும்பூர் எக்ஸ்பிரஸ்' எப்போதும் போல அறிவாலயம் நோக்கியே பயணிக்கும்; ராஜ்மோகனின் அரசியல் கனவு டெபாசிட் இழப்பில் முடியவே அதிக வாய்ப்புகள் உள்ளன!
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி
தியாகராயர் நகர் - புஸ்ஸி ஆனந்த்
மயிலாப்பூர் - வெங்கட்ராமன்
வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா
கோபி - செங்கோட்டையன்
திருப்பரங்குன்றம் - நிர்மல் குமார்
திருச்செங்கோடு - அருண்ராஜ்
குமாரபாளையம் - விஜயலட்சுமி
சைதாப்பேட்டை - அருள்பிரகாசம்
எழும்பூர் - ராஜ் மோகன்
லால்குடி - கு.ப.கிருஷ்ணன்
திருப்பூர் வடக்கு - சத்தியபாமா
ஆயிரம் விளக்கு - ஜே.சி.டி.பிரபாகர்
கொளத்தூர் - வி.எஸ்.பாபு
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. டென்ஷனான ராகுல் காந்தி.. கூட்டத்தில் எம்பிக்கள் வாக்குவாதம்! -
காங்கிரஸ் கை வசம் வந்த ஈரோடு கிழக்கு! ஈவிகேஎஸ் இளங்கோவன் பேத்தி சமன்னா போட்டியா? -
காங்., விற்று திண்கின்றனர்! இனி யாராலும் காக்க முடியாது.. திமுக தொகுதி பங்கீட்டால் ஜோதிமணி அட்டாக் -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட் -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications