Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெக கூட்டத்தில் சூரஜ் இறந்ததை ஏன் பெரிய செய்தியாக்க வேண்டும்? ஃபெலிக்ஸ் ஜெரால்டு கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலத்தில் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் உயிரிழந்த வடமாநில நபரின் குடும்பத்தினரை சந்தித்து தவெக நிர்வாகிகள் யாரும் ஆறுதல் கூறவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு தவெக நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். தவெக மீது அவதூறு பரப்ப முயன்று வருவதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனை முன்னிட்டு 13 ஆம் தேதி தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள திடலில் இந்த மீட்டிங் நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

TVK Refutes Claims of Neglecting Deceased Man s Family at Salem Meet

தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துக்கொண்ட சூரஜ் என்ற 37 வயதான சுராஜ் என்ற நபர் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பர் மோகனுடன் விஜய்யை பார்ப்பதற்காக வந்த அவர், வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு முதலுதவி அளித்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து நடந்த விசாரணையில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. வெள்ளி நகை பட்டறையில் பணிபுரிந்த வந்த அவருக்கு, உடல்நலக்குறைவு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதனை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். உயிரிழந்த சுராஜிற்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். இந்த மொத்த குடும்பமும் சுராஜின் வருமானத்தை நம்பியே இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

சூரஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடைய இறப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், உண்மையான காரணத்தை கண்டறிவதற்கு அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சூரஜின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர்.

உயிரிழந்துள்ள சூரஜின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அவருக்கு 6 வயது பையன். 10 வயது பெண் குழந்தை இருக்கிறது. அவர் நல்லா தான் இருந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். தவெக கட்சி சார்பில் இருந்து யாரும் வந்து பார்க்கவில்லை. தொலைபேசியில் கூட எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளனர். அவருடைய குடும்பத்தினருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும். தவெக கட்சி சார்பில் நிதியுதவி பண்ணனும்" எனக் கூறினர்.

தவெக சார்பில் வேறு யாரும் வரவில்லை. ஒருவர் மட்டும் வந்து பார்த்துவிட்டு நாளைக்கு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவரும் வரவில்லை. சூரஜை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு எதாவது உதவி செய்ய வேண்டும். இல்லையெனில் உடலை வாங்கமாட்டோம். 2 வருடத்திற்கு முன்புதான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. ஆனால், சிகிச்சை எடுத்து நன்றாக தான் இருந்தார். தவெகவினர் கூறுவது போல, உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தால், எதற்காக கூட்டத்திற்கு போகப்போகிறார் என சூரஜ்ஜின் உறவினர் கேள்வி எழுப்பினார்.

தவெக கூட்டத்துக்கு வந்து சூரஜ் உயிரிழந்த நிலையில், கட்சி சார்பாக யாருமே இன்னும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விஜய் தனது சமூக வலைதளத்தில் கூட தற்போது வரை சூரஜ் மரணத்திற்கு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு தவெக செய்தி தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு பதில் அளித்துப் பேசுகையில், "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரு இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதைப் பற்றி பேசினோமா? இதுவும் அப்படியான விபத்து தானே? இதை ஏன் பெரிய செய்தியாக்க வேண்டும்?" என்றார்.

சேலம் தவெக கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த சூரஜ் குடும்பத்தினரை தவெக நிர்வாகிகள் சந்திக்கவில்லை என்பதால் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்வதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தவெக நிர்வாகி ஆனந்த், "திமுகவுக்கு இதுவே ஒரு பிழைப்பு. மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கிறார்கள். உயிரிழந்த சூரஜ், ஒரு இதய நோயாளி. அவர் தவெக நிர்வாகி இல்லை. அந்தக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு மட்டும் தான் பாஸ் கொடுத்திருந்தோம்.

வேடிக்கை பார்க்க வந்த சூரஜுக்கு மாரடைப்பு வந்துள்ளது. இந்த இடத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஏதாவது அரசியல் செய்துவிட முடியுமா? தவெக மீது அவதூறு பரப்பிவிட முடியுமா? என திட்டமிட்டு வருவது யார் என்பது எல்லோருக்கும் தெரியும். இது எவ்வளவு கீழ்த்தரமான மனப்போக்கு.. உங்கள் கதைகள் எல்லாம் ரொம்ப நாள் செல்லுபடி ஆகாது" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+