Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக நிரந்தர எதிரி.. அவர்களுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவை சேர்க்க முடியாது.. அடித்து சொன்ன ராஜ்மோகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் நிரந்தர எதிரியான பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் யாரையும் எங்களுடன் சேர்த்துக் கொள்ள முடியாது என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக எடப்பாடி பழனிசாமி மறைமுகமாகக் கூறியிருந்த நிலையில், தவெக தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தவெக இணைக்கப்படுமா என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளது என்று பதில் அளித்தார். அதேபோல், அதிமுகவினர் பலரும் தவெக தங்களுடன் இணைய வேண்டும் என்று வெளிப்படையாகவே அழைப்பு விடுத்து வருகின்றனர்.

TVK Rules Out Alliance with Any Party Associated with BJP Rajmohan

அதிமுக - தவெக கூட்டணி?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, தேர்தல் யுக்திகளை வெளியில் சொல்ல முடியாது என்று பதில் அளித்தார். இதனிடையே மக்கள் சந்திப்பு பயணத்தின் போது பிரம்மாண்ட கட்சி ஒன்று அதிமுகவுடன் கூட்டணி அமைக்க போகிறது என்று தொண்டர்களிடம் கூறி ஆச்சரியம் கொடுத்தார்.

இதனால் கடைசி நேரத்தில் பாஜக உடனான கூட்டணியை முறித்து தவெகவுடன் அதிமுக செல்ல வாய்ப்புகள் உள்ளதாகப் பேசப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கும் எடப்பாடி பழனிசாமி, உங்களின் யூகங்களுக்குப் பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்தார். இதனால் தமிழக அரசியலில் அதிமுக - தவெக - பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக விவாதங்கள் தொடங்கின.

தவெக விளக்கம்

இந்த நிலையில் தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன், பாஜகவுடன் கூட்டணியில் உள்ள யாரையும் எங்களுடன் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ராஜ்மோகன் தனது எக்ஸ் பக்கத்தில், தமிழகத்தின் முதன்மை சக்தியான தவெக தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தைச் சிலர் உருவாக்கி வருகின்றனர்.

ஏனென்றால், ஆண்ட கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் வெற்றித் தலைவரின் எழுச்சியை, கருத்துக்கணிப்புகளில் பார்த்துக் காய்ச்சல் வந்திருக்கிறது. தங்கள் இயலாமையை மறைக்க, மக்களைத் திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனைக் கதையைச் சொல்லி வருகிறார்கள். மீண்டும் தெளிவாக உணர்த்துகிறோம். எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எமது முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான்.

நிரந்தர எதிரி பாஜக

அவர் தலைமையில் மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் 'நிரந்தர' எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்ளமாட்டோம். மாற்றிப் பேசுவதும் ஏற்றிப் பேசுவதும், வேண்டாம் என்றால் ஆள் வைத்துத் தூற்றிப் பேசுவதும் மற்ற அரசியல்வாதிகளின் பழக்கமாக இருக்கலாம்.

எங்கள் தலைவர் சொன்னால் சொன்ன சொல்படி நிற்கும் மாவீரர்! தான் எடுத்த முடிவை ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளும் பழக்கமே அவருக்கு இல்லை! இதுதான் உண்மை வரலாறு! சரித்திர சிறப்புப் பெறப்போகும் மாநாடு முடித்து, தலைவர் விஜய் அவர்களின் வெற்றிப் பயணம் முடித்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் செய்து, நம் தலைவர் தலைமை ஏற்று வரும் சமத்துவ சமதர்ம சக்திகளை அரவணைப்போம்.

திமுக, பாஜக மீது அட்டாக்

மண்ணுக்கும் மக்களுக்கும் தீமை பயக்கும் மதப்பற்று பாஜக, குடும்பப்பற்று திமுக இருவரையும் தோற்கடிப்போம்! பிளவுவாத சக்திகள் மற்றும் மக்கள் விரோத மன்னராட்சி மனப்பான்மை ஆட்சியாளர்களை, வெற்றித் தலைவர் தலைமையில் வெல்வோம்! ஊடகக் கற்பனைகளைப் புறந்தள்ளி, உண்மை களநிலவரத்தை அறிந்து செயல்படுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+