'பனையூர் பண்ணையார்' என பாய்ந்த அதிமுக.. “அவங்களோட சண்டை வேண்டாம்” பேக் அடித்த ஆதவ் அர்ஜுனா
சென்னை: அதிமுகவை சீண்டும் விதமாக சமீபத்தில் விஜய் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த அக்கட்சி, விஜய்யை பனையூர் பண்ணையார் என்று விமர்சித்திருந்தது. இந்நிலையில், அதிமுகவுடன் சண்டை வேண்டாம் என்று தவெக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியிருக்கிறார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கிறோம் என்று அறிவித்தும்.. இன்னும் எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணிக்கு வரவில்லை. இப்படி இருக்கையில், சமீபத்தில் மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் பேசிய விஜய், அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சித்திருந்தார்.
பனையூர் ப

இதற்கு எதிராக கொந்தளித்த அதிமுக, "பனையூர் பண்ணையார் அவர்களே, ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நீங்கள்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி. மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணா திமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று.
எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு" என்று விளாசியிருந்தது.
சர்கார் படம் நினைவிருக்கா?
அதேபோல, அதிமுக எம்எல்ஏ விவி ராஜன் செல்லப்பா.. "புதிய கட்சிக்காரர்களை கூட நான் விமர்சிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை நான் சொன்னதே கிடையாது. அண்ணா திமுகவை தொட்டுவிட்டார். இனி சும்மா இருக்க முடியாது என்கிற நிலை வந்துவிட்டது. நீங்கள் புதிய கட்சியை தொடங்கியிருக்கிறீர்கள். அப்படியெனில் நீங்கள் ஏதேனும் ஒரு திட்டத்தை சொல்ல வேண்டும் அல்லவா. எங்களுடைய கொள்கை இது.. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்று சொல்லியிருக்க வேண்டும்.
விவி ராஜன் செல்லப்பா
நீங்கள் யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.. உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.. சர்கார் என ஒரு திரைப்படம் வந்தது. அதில், அம்மா கொண்டு வந்த லேப்டாப் திட்டத்தில் வழங்கப்பட்ட லேப்டாப்பை போட்டு உடைத்தார்கள். இதனையடுத்து நாங்கள் அந்த படத்தை ஓட விடாமல் செய்தோம்" என்று விஜய்யை டார்கெட் செய்திருந்தார்.
பாஜகவின் பி டீம்
இப்படி அதிமுக சூடான நிலையில், அதிமுகவை விமர்சிக்க வேண்டாம் என்று ஆதவ் அர்ஜுனா கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். "தவெக- திமுக இடையேதான் போட்டி. அதிமுகவுடன் தொண்டர்கள் சண்டை போட வேண்டாம். அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை, அக்கட்சி எந்தக் கூட்டணி உருவாக்கினால் நமக்கென்ன? பாஜகவின் பி டீம் என்று தவெகவை திமுகவினர் கூறுகின்றனர். பாஜகவின் பி டீம் திமுகதான்" என்று கூறியிருக்கிறார்.
அதேபோல திருமாவளவன் குறித்து பேசிய ஆதவ், "என் கொள்கை ஆசான் திருமாவளவன். அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை" என்றும் கூறியிருக்கிறார். முன்னதாக, விசிகவில் வெறும் 20 பேர்தான் இருக்கிறார்கள் என்று ஆதவ் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications