கோமா நிலையில் தவெக.. வசமாக சிக்கிக் கொண்ட விஜய்.. சொல்லி கொடுத்து ஆடுவதால் வந்த வினை!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) சந்திக்கவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கள நிலவரம் விஜய்க்குச் சாதகமாக இருக்கிறதா என்றால், கட்சிக்குள்ளேயே பலத்த முணுமுணுப்புகள் கேட்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியை சுற்றியே தவெக-வின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசியலில் திமுக-வை வீழ்த்த வேண்டுமெனில், அந்த எதிர்ப்பு ஓட்டுகள் அனைத்தும் ஒரே திசையில் குவிய வேண்டும் என்பது அரசியல் பாலபாடம். பாஜக - அதிமுக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) விஜய் இணைந்தால், அது திமுக-விற்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்பது மாவட்டச் செயலாளர்களின் கணிப்பு. ஆனால், இந்தக் கூட்டணி முயற்சியைத் தடுத்து நிறுத்துவதில் ஜான் ஆரோக்கியசாமி மிகத் தீவிரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக-அதிமுக கூட்டணி அமையும் முன்பே அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைத்திருக்கலாம். ஆனால் அதையும் தவறவிட்டுவிட்டார். இதனால் திமுகதான் இப்போது குஷியாக இருக்கும் ஒரே கட்சி என்று கூறப்படுகிறது. "விஜய் யார் பக்கமும் சேராததால், திமுக மறுபடி ஆட்சிக்கு வந்து தமிழக நலன் சார்ந்த திட்டங்களை வழக்கம்போல முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துவிட்டது" என்கிறார், நம்மிடம் பேசிய திமுக மூத்த நிர்வாகி ஒருவர்.

மறைமுக அஜென்டா
ஜான் ஆரோக்கியசாமிக்கு "விஜய் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை" என்கிற ஒரு மறைமுக 'அஜென்டா' இருப்பதாகத் தெரிகிறது. இவர்தான் நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து வந்த காளியம்மாள் போன்ற ஆளுமைகள் தவெக-வில் இணைய முற்பட்டபோது, முட்டுக்கட்டை போட்டு அவர்களைத் திருப்பி அனுப்பியதாகத் தகவல். இது கட்சிக்கு ஆரம்பத்திலேயே விழுந்த பலத்த அடி.
இதன் பிறகு ஒரு லெட்டர் பேடு கட்சியை கூட தவெக பக்கம் சேரவிடவில்லை விஜய்யை சுற்றி இருக்கும் பவர் சென்டர்கள். ஆரம்பத்தில் விஜய் தான்தான் முதல்வர் என்ற ரீதியில் ஆட்சியில் பங்கு குறித்தெல்லாம் பேசினார், ஆனாலும் ஏன் நம்மை யாரும் சீண்டவில்லை, நம்மை சுற்றி இருப்பவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று விஜய் யோசிக்கவேயில்லை. மக்களோடும், கட்சியினரோடும் விஜய் கலந்து பழகாமல் பவர் சென்டர்கள் சொல்வதை கேட்பதால் உலக நடப்பு அவருக்கு தெரியவில்லை.
தொடர் சறுக்கல்கள் - ஜான் ஆரோக்கியசாமி மீது ஏன் புகார்?
விஜய் சமீபகாலமாக வாராவாரம் ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். அது அரசியல் ரீதியான தவறாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செய்திகளாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் ஆலோசகரின் பங்கு கேள்விக்குறியாகிறது.
- நிர்வாகக் குறைபாடு: கரூர் கூட்ட நெரிசலில் மக்கள் சிக்கித் தவித்தபோது, அதைச் சரியாகக் கையாளாமல் விஜய் உடனடியாக சென்னைக்குத் திரும்பியது மக்கள் மத்தியில் எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கியது.
- தவறான செய்திகள்: விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் விவாகரத்து தொடர்பான வதந்திகள் பரவியபோது, அதைத் தடுத்து நிறுத்தி விஜய்யின் இமேஜைக் காக்க வேண்டிய ஆலோசகர், அதில் கோட்டை விட்டதாகக் கூறப்படுகிறது.
- கூட்டணி முடக்கம்: மாவட்டச் செயலாளர்கள் பலர் "தனித்து நின்றால் ஓட்டுகள் பிரியும், பலமான கூட்டணியே வெற்றிக்கு வழி" என்று சொல்லியும், ஜான் ஆரோக்கியசாமி அதைத் தடுத்து வருவது ஏதோ ஒரு 'வெளிச்சக்தி'க்காக அவர் வேலை செய்கிறாரோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
மில்லியன் டாலர் கேள்வி: ஏன் இன்னும் மாற்றம் இல்லை?
ஒரு அரசியல் ஆலோசகர் தோல்வியைத் தழுவினால் அல்லது கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தினால் உடனடியாக மாற்றப்படுவது வழக்கம். ஆனால், இத்தனை விமர்சனங்கள் வந்தும் ஜான் ஆரோக்கியசாமியை விஜய் இன்னும் மாற்றாதது அரசியல் வட்டாரத்தில் "மில்லியன் டாலர் கேள்வி" யாக உள்ளது.
விஜய் ஒரு கைப்பாவையாக மாற்றப்படுகிறாரா? ஜான் ஆரோக்கியசாமிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு 3 எழுத்துக் கட்சிக்கும் மறைமுகத் தொடர்பு இருக்கிறதா? என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. எதிர்க்கட்சி ஓட்டுகளைப் பிரிப்பதன் மூலம் மறைமுகமாக திமுக-விற்குப் பயன்படும் வகையிலேயே விஜய்யின் நகர்வுகள் ஜான் ஆரோக்கியசாமியால் வடிவமைக்கப்படுகின்றன என்பது தவெக நிர்வாகிகளின் வேதனையாக உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஒரு மாற்று சக்தியாக உருவெடுக்க வேண்டுமானால், அந்த சக்கரம் சரியான பாதையில் சுழல வேண்டும். ஆனால், சக்கரத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் கைகளே (ஆலோசகர்கள்) அதைத் தவறான திசையில் திருப்பினால், 2026-ல் விஜய் காணும் கனவு கானல் நீராகிவிடும். ஜான் ஆரோக்கியசாமி போன்றவர்களின் பிடியில் இருந்து விஜய் எப்போது விடுபடுகிறாரோ, அப்போதுதான் தவெக உண்மையான அரசியல் களத்தைக் காணும் என்கிறார்கள் தவெகவினர்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications