பாமக அருளுக்கு திறக்கும் பனையூர் கேட்.. ஜான் ஆரோக்கியசாமி கொடுத்த ஒப்புதல்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமகவில் இருந்து வருவோரை தவெகவில் இணைக்க கூடாது என்பதில் தவெகவின் தேர்தல் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பிடிவாதமாக இருந்தார். ஆனால் பாமக முன்னாள் எம்எல்ஏ அருளுக்காக மட்டும் அந்த பிடிவாதத்தில் இருந்து தவெக இறங்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் விரைவில் அருளுக்காக பனையூர் கேட் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியை அமைத்துள்ள சூழலில், அக்கட்சியின் கட்டமைப்பை பலமாக உருவாக்க முதல்வர் விஜய் தீவிரமாக இருக்கிறார். இதனால் தவெகவில் அனைத்து அணிகளையும் உருவாக்குவதோடு, அதற்கேற்ப சக்தி வாய்ந்த நிர்வாகிகளையும் திறமைசாலிகளையும் கொண்டு வர வேண்டும் என்பதில் அக்கட்சி தலைமை தீவிரமாக உள்ளது.

TVK

முதற்கட்டமாக அதிமுக நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்த தவெக, அதன்பின் மற்ற கட்சி நிர்வாகிகளையும் பனையூருக்கு அழைத்து சேர்த்து கொண்டது. இருப்பினும் பாமகவில் இருந்து தவெகவில் எந்தவொரு நிர்வாகியும் சேர்த்து கொள்ளப்படவில்லை. இதன் பின்னணியில் விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமிதான் இருந்தார்.

அன்புமணி உடனான நட்பு காரணமாக ஜான் ஆரோக்கியசாமி இந்த விதியை தவெகவினருக்கு கொண்டு வந்தார். விஜய் உடனான ஜான் ஆரோக்கியசாமி நட்பு காரணமாகவே தவெகவுடன் அன்புமணியும் நெருக்கம் காட்டி வருகிறார். இதன் பின்னணியும் பாமக வசம் உள்ள எம்எல்ஏக்களும் ஒரு முக்கிய காரணம். ஏதோவொரு கட்டத்தில் பாமக ஆதரவு தேவையாக இருக்கும் என்று தவெக நம்புகிறது.

ஆனால் ராமதாஸ் - அன்புமணி தரப்பு இணைந்ததால், ராமதாஸ் ஆதரவாளர்கள் சோகத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே அன்புமணியை கடுமையாக எதிர்த்துவிட்ட சூழலில், மீண்டும் அவரிடமே போய் எப்படி நிற்பது என்று பலரும் ஆலோசித்து வருகின்றனர். குறிப்பாக பாமக முன்னாள் எம்எல்ஏ-க்களான ஜிகே மணி மற்றும் அருள் ஆகியோர் என்ன செய்வது என்று ஆலோசிக்கிறார்கள்.

இதில் அருளுக்கு திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அன்புமணி கேட்டுக் கொண்டதால், அருளை தவெகவில் இணைக்க வேண்டாம் என்று முடிவுக்கு அக்கட்சி தலைமை வந்தது. தற்போது அருள் தொடர்ச்சியாக தவெக அமைச்சர்கள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டே இருக்கிறார்.

இந்த நிலையில் ஜான் ஆரோக்கியசாமியும் நேரடியாகவே அருளை இணைக்க ஒப்புதல் கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் விரைவில் பனையூர் அலுவலகத்தில் அருள் தவெகவில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் அவரின் ஆதரவாளர்களையும் பாமகவில் இருந்து இழுத்து வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+