ஆமா.. உதயநிதி ஸ்டாலினை அண்ணன் என நான் அழைத்தது ஏன் தெரியுமா? வேல்முருகன் விளக்கம்
சென்னை: உதயநிதியை அண்ணன் என தான் ஏன் அழைத்தேன் என்பது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி வேல்முருகன் விளக்கமளித்துள்ளார்.
கடந்த 14 ஆம் தேதி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அவருக்கு ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து அவருக்கு அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் நேரில் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

கூட்டணி கட்சித் தலைவர்கள்
கூட்டணி கட்சித் தலைவர்களும் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். அந்த வகையில் விசிக எம்பி ரவிக்குமார், உதயநிதியின் கைகளை பிடித்து வாழ்த்துகளை சொன்னார். அது போல் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மஞ்சள் நிற பொன்னாடையுடன் வந்தார். உதயநிதியுடன் கிருத்திகாவும் நின்றிருந்தார்.

வீடியோ காலில் இன்பநிதி
அவர் கையில் போனில் மகன் இன்பநிதி வீடியோ காலில் வந்திருந்தார். தன் கணவரிடம் போனை கொடுப்பதற்காக கிருத்திகா, உதயநிதி அருகிலேயே நின்றிருந்தார். அப்போது உதயநிதிக்கு துண்டை தந்து வாழ்த்துகளை வேல்முருகன் தெரிவித்தார். அருகில் நின்றிருந்த கிருத்திகாவிடம், "வணக்கம்மா நான்தான் வேல்முருகன்" என சொன்னார்.

அண்ணிக்கிட்ட சொல்லுங்க
உடனே உதயநிதியிடம் "அண்ணிக்கிட்ட சொல்லுங்க.. அவங்களுக்கு தெரியாது" என்றார். உடனே இதை கேட்ட உதயநிதியும் கிருத்திகாவும் சிரித்தனர். தன்னைவிட வயதில் சிறியவரை அண்ணன் என்றும் கிருத்திகாவை அண்ணி என்றும் வேல்முருகன் அழைத்தது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்குள்ளானது. ஒரே ஒரு எம்எல்ஏ சீட்டுக்காக வேல்முருகன் படும்பாடு இருக்கிறதே என நெட்டிசன்கள் ட்விட்டரில் கலாய்த்து தள்ளிவிட்டனர்.

செயற்குழு கூட்டம்
இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் வேல்முருகன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் நான் கூவி கூவி கேட்டும் ஓட்டு போடவில்லை, நான் சொல்லி ரம்மியா விளையாடுவார்கள் என சரத்குமாரின் கூற்றை என்னால் ஏற்க முடியாது. ஆன்லைன் சூதாட்டம் மக்களின் உயிருடன் விளையாடி வருகிறது. அதிமுக ஆட்சியில் ஆன்லைன் தடை சட்டம் குறித்து வலுவான காரணங்களை முன் வைக்காததால் உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ஏற்க மறுத்துள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை சட்டம்
திமுக அரசின் திருத்தியமைக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தால் தமிழகத்தில் சரத்குமார் உள்பட எந்த நடிகர், நடிகைகளும் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்க முடியாது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

உடல் உழைப்பு தொழிலாளர்கள்
தமிழ்நாட்டு பெப்சி தொழிலாளர்களையும் உடல் உழைப்பு தொழிலாளர்களையும் வாழ வைக்கும் வகையில் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தமிழகத்தில் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும். ஒரு அமைச்சரவையில் ஒருவரை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம் என்ற அதிகாரம் அந்த மாநில முதல்வருக்கு வழங்கியிருக்கிறது. உதயநிதி கட்சியின் இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அந்த அடிப்படையில் கட்சிக்கும் முதல்வருக்கும் இருக்கிற தனித்த அதிகாரம்.

அண்ணன் என அழைத்தது ஏன்
பொதுமக்களாகிய நாம் விமர்சனங்களை முன் வைக்கலாமே தவிர அவருடை அதிகாரத்தில் தலையிட முடியாது. உதயநிதியை நான் அண்ணன் என அழைத்ததில் ஒரு சர்ச்சையும் இல்லை. என்னைவிட மூத்தவரான தலைமை கழக செயலாளர் என்னை அண்ணன் என்றுதான் கூப்பிடுகிறார். இது தமிழர்களின் பண்பாடு. பொது இடங்களில் உதயநிதியை என்ன கதாநாயகரே என அழைத்துள்ளேன், என்ன உதய் சார் எப்படியிருக்கீங்கள் என கேட்டுள்ளேன், இளைஞரணி செயலாளரே என்றும் அழைத்துள்ளேன். பல இடங்களில் அண்ணன் என்றும் பேசியிருக்கிறேன். இது தமிழர்களுக்குள் உள்ள மேடை நாகரீகம். அந்த இடத்தில் சபாநாயகர் இருக்கார், அமைச்சர் பெருமக்கள் இருக்கிறார்கள், எனவே மேடை நாகரீகம் கருதி அவரை அண்ணன் என அழைத்தேன். அவர் என்னைவிட இரு வயதுதான் இளையவர். கவர்னர், முதல்வர் எல்லாம் இருக்கும் போது அண்ணன், அண்ணி என சொன்னது தப்பான வார்த்தையா? துர்கா ஸ்டாலினை 30 ஆண்டுகளாக அண்ணி என்றுதான் அழைத்து வருகிறேன் என்றார் தி வேல்முருகன்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம்












Click it and Unblock the Notifications