சீமான் Vs வேல்முருகன்: யார் மாஸ் கூட்டத்தை கூட்டியது? வென்றது திருச்சியா? மதுரையா? பரபர விவாதம்!
சென்னை: தமிழ் தேசிய அரசியல் பேசும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இருவரும் நேற்று மதுரை மற்றும் திருச்சியில் நடத்திய பொதுக் கூட்டங்களில் யாருக்கு கூட்டம் அதிகம் என்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.

பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பண்ருட்டி வேல்முருகன் 2012-ல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கினார். திராவிடர் இயக்கம், பாமக உள்ளிட்ட கட்சிகளின் மேடைகளில் பேச்சாளராக இருந்த சீமான் 2010-ல் நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். வேல்முருகன், சீமான் இருவரும் தமிழ்த் தேசிய அரசியல், ஈழப் பிரச்சனை என அனைத்திலும் ஒரே கொள்கை, கோட்பாடு கொண்டவர்கள். தாம் கட்சியை தொடங்கும் போது வேல்முருகனை தலைமை ஏற்க கேட்டுக் கொண்டதாக சீமானே சில பேட்டிகளில் குறிப்பிட்டும் இருக்கிறார்.

வேல்முருகன், சீமான்: அதேநேரத்தில் வேல்முருகன், சீமான் இருவரும் தனித்தனி அரசியல் பாதைகளில் பயணிக்கின்றனர். தற்போது திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெற்றுள்ளது. சீமானைப் பொறுத்தவரையில் யாருடனும் கூட்டணி இல்லை; 31 லட்சம் வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி 1 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவது இலக்கு என்கிறார் சீமான். அதேநேரத்தில் பல செய்தியாளர் சந்திப்புகளில் சீமான், வேல்முருகன் கட்சிகள் கூட்டணிகள் குறித்தும் கேள்வி எழுப்பப்படும். இந்த கேள்விக்கான பதிலை இருதரப்பும் மவுனமாக அல்லது புதிராக கடந்து செல்வதும் வழக்கமாக இருக்கிறது.

மாவீரர் நாள் நிகழ்வுகள்: இந்நிலையில் ஈழ விடுதலைக்குப் போராடி உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளை கட்சி மாநாடுகள் போல நடத்தி இருந்தனர் சீமான், வேல்முருகன் இருவரும். மதுரையில் வேல்முருகனும் திருச்சியில் சீமானும் இந்த நிகழ்வுகளை நடத்தி இருந்தனர்.

மதுரை, திருச்சி: லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தமிழ் தேசியம் பேசுகிற சீமான், வேல்முருகன் இருவரும் மிகப் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி தங்களது செல்வாக்கை வெளிப்படுத்தி இருந்தனர். வடதமிழ்நாட்டு கட்சி என அடையாளப்படுத்தப்பட்டாலும் தம்மை தமிழ்நாடு தழுவிய ஒரு கட்சியாக செயல்பாடுகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் வேல்முருகன். இதன் ஒரு பகுதியாக மதுரையில் மாவீரர் நாள் நிகழ்வை பெருந்திரளாக கட்சியினரை அணிதிரட்டி நடத்தினார். இதேபோல சீமானை ஒரு பகுதி கட்சியாக சுருக்க முடியாத நிலையில் திருச்சியில் மாநிலம் முழுவதும் இருந்தும் கட்சியினரை ஒன்று திரட்டி தமது செல்வாக்கை காட்டி இருந்தார்.

யார் மாஸ்?: இப்போது சமூக வலைதளங்களில் மாஸ் காட்டியது சீமானா? வேல்முருகனா? என்கிற விவாதம் நடைபெற்று வருகிறது. இருதரப்புமே இவ்வளவு பெரிய கூட்டத்தை 'பென்னம் பெரிய' 'பெத்த பெத்த' கட்சிகள்தான் கூட்ட முடியும்; ஆனால் என்றேனும் ஒருகாலம் கூட்டணி அமைக்க சாத்தியம் இருக்கும் சீமானும் வேல்முருகனும் தனித்தனியே தங்களது பலத்தை காட்டி இருப்பது அந்த பெரிய அரசியல் கட்சிகளையும் கூட திரும்பிப் பார்க்க வைக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications