ஜோசியர் சொல்றதுதான் லாஸ்ட்.. சொன்ன பேச்சை தட்டாமல் கேட்ட விஜய்.. திடீர்ன்னு இப்படி ஒரு முடிவா?
சென்னை: கரூர் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை வரும் அக்டோபர் 17ம் தேதி சந்திக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வேலுச்சாமிபுரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. விஜய்க்கு அவரின் ஜோசியர் ஒருவர் குறித்து கொடுத்த நாளின்படி அவர் இந்த முடிவை எடுத்தாதாக கூறப்படுகிறது.
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 41 பேர் பலியானார்கள். இந்த விவாகரத்திற்கு பின் அரசியல் ரீதியாக விஜய் அப்படியே முடங்கிப்போய் உள்ளார். அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள், கண்டனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஜோசியரை நம்பும் விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மிக தீவிரமாக ஒரு ஜோசியரை நம்பி இருப்பதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை எல்லாம் விஜய் அப்படியே தட்டாமல் கேட்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயிடம்.. ஜனவரி வரை சவால்கள் இருக்கும்.. அதற்கு பின் இப்போது நிலவும் நிலைமை சரியாகிவிடும் என்று அந்த ஜோசியர் கூறி இருக்கிறார்.
விஜயின் பெரும்பாலான முடிவிற்கு அரசியல் தாண்டி.. அவரின் ஜோசியர் ஒருவர்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. அதாவது அரசியல் ரீதியாக அவர் முடிவுகளை எடுக்காமல் பல இடங்களில் ஜோசியர் சொன்னதை கேட்டு முடிவு எடுப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக அந்த ஜோசியர்தான் பிரச்சாரத்தில் எந்த தேதியில் பேச வேண்டும் என்று சனிக்கிழமை ஐடியாவை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கரூர் விஜய் திடீர் ஆலோசனை
இப்படிப்பட்ட நிலையில்தான் கரூர் சம்பவத்திற்கு பின்பும் கூட அடிக்கடி ஜோசியர் உடன் விஜய் ஆலோசனை செய்து வருகிறாராம். ஜோசியர் அடிக்கடி விஜய் வீட்டிற்கு சென்று ஆலோசனை செய்து உள்ளாராம். இப்போது நேரம் உங்களுக்கு சரியில்லை. உங்கள் ஜாதகப்படி இப்போது கொஞ்சம் கஷ்டம். ஜனவரிக்கு பின் எல்லாம் சரியாகிவிடும். அதுவரை கொஞ்சம் யோசித்து காய் நகர்த்தவும் என்று அந்த ஜோசியர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.
ஜனவரி வரை சவால்கள் இருக்கும். அதற்கு பின் நிலைமை சரியாகிவிடும் என்று அந்த ஜோசியர் கூறி இருக்கிறார். விஜய் தான் எடுக்கும் பெரும்பாலான முடிவுகளை அந்த ஜோசியர் சொன்னதை கேட்டே எடுப்பதாக கூறப்படுகிறது. அந்த ஜோசியர் சொல்லும் விஷயங்களை எல்லாம் விஜய் அப்படியே தட்டாமல் கேட்கிறார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
TVK அரசியல் முடிவுகளை கூட அவர் இதை நம்பித்தான் எடுக்கிறார். தவெக எல்லாம் இருக்கட்டும்.. பர்சனல் முடிவுகளை கூட அவரை நம்பித்தான் எடுக்கிறார். விஜய் பெரும்பாலும் அரசியல் ஆலோசகர்கள் சொல்வதை விட.. இந்த ஜோசியர் சொல்வதைத்தான் அதிகம் கேட்கிறார். நம்பிக்கை இருக்கலாம்.. ஆனால் பல முடிவுகளை அதை வைத்து எடுப்பது சரியில்லை என்று அவருக்கு நெருக்கமான சிலர் புலம்பி வருகிறார்களாம்.
ஜோசியர் குறித்து கொடுத்த தேதி
கரூரில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை வரும் அக்டோபர் 17ம் தேதி சந்திக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வேலுச்சாமிபுரம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. விஜய்க்கு அவரின் நெருக்கமான ஜோசியர் குறித்து கொடுத்த நாளின்படி அவர் இந்த முடிவை எடுத்தாதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications