Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனநாயகன் வரட்டும்.. அதுவரை அரசியல் பேச வேண்டாம்? சபதம் போட்டுட்டாரு விஜய்? என்னங்க நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் வெளியீடு சுமுகமாக முடியும் வரை பெரிதாக அரசியல் பேச வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் வெளியீடு தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணையில் பிஸியான அவர்.. தமிழ்நாட்டில் தினம் தினம் நடக்கும் பல முக்கிய விஷயங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்கி உள்ளார்.

அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் செய்தனர். இன்னும் பல அரசியல் ஊழியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

Vijay tvk jananayagan

இது போக வேளச்சேரியில் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இப்படி சட்ட ஒழுங்கு தொடர்பாகவும், பாதுகாப்பு தொடர்பாகவும், பணி நிரந்தரம் தொடர்பாகவும் தமிழ்நாட்டில் களம் சூடாக உள்ளது.

அதோடு தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர். என் ரவி தனது உரையை புறக்கணித்து வெளியேறி உள்ளார். நடப்பு ஆண்டில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படாததால், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார்.

இதைத்தொடர்ந்து, சட்டமன்ற வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் ஆளுநரை உரையாற்றவிடவில்லை, ஆளுநர் ரவி உரையாற்றியபோது மைக் ஆஃப் செய்யப்பட்டதாகவும், ஆளுநர் உரையில் பல ஆதாரமற்ற கூற்றுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு இடையே ஓசூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. ஓசூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது. இது திட்டத்திற்குப் பெரும் பின்னடைவு. பிராந்திய வான்வெளி இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) கட்டுப்பாட்டில் உள்ளதால், பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி அவசியம் என்பதால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

கடந்த வாரம், HAL-க்கு வான்வெளி தேவைப்படுவதாக அமைச்சகம் கடிதம் மூலம் கோரிக்கையை மறுத்தது. "HAL-க்கு வான்வெளி தேவை என அமைச்சகம் தெரிவித்துக் கோரிக்கையை நிராகரித்தது. மாநில அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராயும்." என்று கூறப்பட்டு உள்ளது. இப்படி தொடர்ந்து தமிழ்நாட்டில் பல முக்கிய சம்பவங்கள் நடந்து உள்ளன.

மௌனம் காக்கும் வைகை

இப்படி முக்கியமான விவகாரங்கள் அனைத்திலும் விஜய் எந்த கருத்தும் சொல்லவில்லை. விஜய் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. எதற்கும் கண்டனமோ, கருத்தோ அவர் தெரிவிக்கவில்லை.

எதிலும் கருத்து சொல்லாமல் ஜனநாயகன் வெளியீட்டில் பிஸியான விஜய்.. தமிழ்நாட்டில் தினம் தினம் நடக்கும் பல முக்கிய விஷயங்களை கண்டுகொள்ளாமல் ஒதுங்கி உள்ளார். ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் உள்ள நிலையில், அரசியலுக்கும் பாஸ் கொடுத்துள்ளார் விஜய். முக்கியமாக ஜனநாயகன் படத்தின் சிக்கலுக்கும், திமுகவிற்கு சம்பந்தமே இல்லை.. குறைந்தபட்சம் திமுக தொடர்பான விவகாரங்களில் திமுகவை விமர்சிக்கலாம்.. ஆனால் அதையும் விஜய் தவிர்த்து வருகிறார்.

விஜயின் கடைசி படமாக இது இருந்தாலும் இன்னொரு பக்கம் அரசியலிலும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும். இளம் அரசியல் தலைவர் ஒரு seasoned அரசியல்வாதியாக இருப்பார் அதை செய்யாமல் சீசனுக்கு சீசன் மட்டும் அரசியல் செய்யும் தலைவராக உருவெடுத்து உள்ளார். ஏற்கனவே திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி விஜய் பேசவில்லை, வடஇந்தியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையில் நடந்த தாக்குதல் பற்றி பேசவில்லை, ஆணவக்கொலைகள் பற்றி பேசவில்லை.. இப்படி தொடர்ந்து ஒதுங்கியே இருக்கும் விஜய்.. எப்போது உண்மையில் தீவிர அரசியலில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+