விஜய் அவசர மீட்டிங்.. இரவோடு இரவாக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு.. என்ன காரணம்?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தைலையொட்டி தங்களுடன் கூட்டணி வந்தால்ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று தவெக தலைவர் விஜய் அறிவித்தார். ஆனால் இன்று வரை எந்த கட்சியும் தவெகவுடன் கூட்டணி சேரவில்லை. இந்நிலையில் தான் இன்று இரவு திடீரென்று விஜய் மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இன்று இரவு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது.

கூட்டணிக்கு அழைத்தும் யாரும் வரவில்லை என்பதால் தேர்தலை தனித்து போட்டியிடும் சூழல் வரலாம். தேர்தலில் தனித்த போட்டியிட்டால் ஏற்படும் சவால்கள், களப்பணியில் இருக்கும் சிக்கல்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, வேட்பாளர் பட்டிலை இறுதி செய்வதது, விஜய் போட்டியிடும் தொகுதி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரசார பணிகள் உள்ளிட்டவை பற்றி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications