Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுக்கு ஏன் கட்சி நடத்திக்கிட்டு.. பொங்கல் விழாவை கேன்சல் செய்த விஜய்! கடுப்பான தவெக.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொங்கல் விழா நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த விழா கடைசி நேரத்தில் கேன்சல் செய்யப்பட்டது.

முன்னதாக பொங்கல் அன்று சமத்துவ பொங்கல் விழா நடத்தி அதில் தவெக கட்சி சின்னத்தை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு சின்னம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

TVK Vijay

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னம் தேர்தல் ஆணையம் மூலம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. ஆனால் இது உறுதியானது இல்லை. அந்த சின்னம் வழங்கப்படாமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் ஒதுக்கீடு) ஆணை, 1968 இன் விதிகளின் கீழ் தங்களுக்கு ஒரு தேர்தல் சின்னத்தை ஒதுக்கக் கோரி இக்கட்சி, இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தது.

பொதுத்தேர்தல் சின்னம்

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முதல் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது வேட்பாளர்களுக்கான பொதுத் தேர்தல் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) அணுகி இருந்தார். TVK இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், விசில், ஆட்டோ ரிக்‌ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலுடன், தேர்தல் சின்னங்கள் ஆணை, 1968-இன் கீழ், விண்ணப்பத்தை கடந்த சில வாரங்களுக்கு முன் சமர்ப்பித்தார். இந்த சின்னம் விவகாரத்தில் "டெல்லி" விஜய்க்கு எதிராக கேம் ஆடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படியில் இந்த சின்னம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. முதலில் விசில் சின்னம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்.. தற்போது வரை சின்னம் எதுவும் வழங்கப்படவில்லை.. அதனால்தான் விஜய் அதை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பொங்கல் விழா கேன்சல்

பொங்கல் விழாவில் இந்த சின்னத்தை அறிவிக்கலாம் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் சின்னம் கிடைக்காத காரணத்தால் அவர் கட்சி விழாவை கேன்சல் செய்துவிட்டு வெளிநாட்டில் நடந்த தயாரிப்பாளர் ஒருவரின் வீட்டு நிகழ்வில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தினரை அப்செட் ஆக்கி உள்ளது. ஜனநாயகன் ரிலீஸ் ஆகவில்லை, கட்சிக்கு முழுமையாக மாவட்ட நிர்வாகிகள் போடவில்லை, இப்போது பொங்கல் விழா கூட நடத்தவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று நிர்வாகிகள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.

விசில் சின்னத்திற்கு முக்கியத்துவம்

விஜய் 'விசில்' சின்னத்திற்கே கட்சி அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அது 2019ஆம் ஆண்டு விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்துடன் தொடர்புடையது. எளிமையான, மக்கள் சுலபமாகத் தொடர்புபடுத்தக்கூடிய, விரைந்து வாக்காளர்களைச் சென்றடையக்கூடிய சின்னமே கட்சிக்குத் தேவை என்று விஜய் கருதுவதாக கூறப்படுகிறது. . சமர்ப்பிக்கப்பட்ட 10 சின்னங்களில், ஏழு புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் இலவசச் சின்னங்கள்; மூன்று, சுயமாக உருவாக்கப்பட்டவை ஆகும்.

பேரணிகளின் போது தொண்டர்களிடையே எடுத்துச் செல்லவும், விநியோகிக்கவும் எளிதாக இருக்கும் என்பதால், விசில் தவெகவிற்கு சாதகமாக இருக்கும். இதனால் அதை கேட்டு தவெக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பொதுச் சின்னங்கள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன.

விசில் சின்னம் ஒதுக்கீடு

விஜய்க்கு இந்த சின்னத்தை தேர்வு செய்ய சொன்னது அவரின் ஆஸ்தான ஜோசியர் என்று கூறப்படுகிறது.

அரசியல் ஆலோசகர்கள் இது குறித்து நம்மிடம் பேசுகையில், விசில் சின்னம் சுவரில் வரைவதற்கும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் தெளிவாகத் தெரிவதற்கும் எளிதாக இருப்பதால், பிரச்சார ரீதியாகச் சிறப்பாகச் செயல்படும். சின்னங்கள் வேட்பாளர் பெயர்களைப் போலவே முக்கியம். அங்கீகாரம், மக்கள் இடையே எளிதாக சென்று சேர்வது, பார்த்தவுடன் தெரிவது ஆகியவை வாக்குப்பதிவு நாளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.. அந்த வகையில் விசில் சின்னம் விஜய்க்கு சாதகமாக இருக்கும் என்று கூறி உள்ளனர்.

வடிவமைப்பின் எளிமையும், பார்வைப் புலப்படும் தன்மையும் வாக்காளர்களின் நினைவாற்றலை மேம்படுத்தும்.. முக்கியமாக விசில் சின்னம் இளைஞர்கள் தொடங்கி வயதானவர்கள் வரை பலருக்கும் பிரபலமான சின்னம்.

சின்னம் கிடைப்பதில் சிக்கல்

ஏற்கனவே கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் தருவதில் சிக்கல் என்று வரிசையாக டெல்லி தரப்பு விஜய்க்கு பிரஷர் போட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு சின்னம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. விஜய்க்கு முதலில் விசில் சின்னம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில்.. தற்போது வரை சின்னம் எதுவும் வழங்கப்படவில்லை.. அதனால்தான் விஜய் அதை அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+