சாதிவாரி கணக்கெடுப்பு.. SOP சர்ச்சை.. தவெகவின் ஆர்ப்பாட்டம் வேஸ்ட்.. முக்கியப் புள்ளி கருத்து
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் எஸ்ஓபி தொடர்பாக தவெக அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் சென்சஸ் தொடங்கவுள்ளது. அப்படி இருக்கையில், இப்போது எப்படி மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் என்றும், SOP விதிகள் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதாவது: தமிழக வெற்றிக் சார்பில் வரும் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தவெக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சர்வே என்பது மாநில அரசினுடையது, சென்சஸ் என்பது மத்திய அரசினுடையது. ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் சென்சஸ் தொடங்கவுள்ளது. அப்படி இருக்கையில், இப்போது எப்படி மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் சொல்லியிருந்தால் அரசியல் ரீதியாக சரியான நேரமாக இருந்திருக்கும். இப்போது எதற்காக தமிழக அரசைக் கண்டித்து ஆப்பாட்டம் நடத்துகிறார்கள். எஸ்ஓபி போடுவதன் மூலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் சுற்றுப் பயணத்தை குலைக்க முயற்சிக்கிற தமிழக அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஓபி போட சொன்னது நீதிமன்றம். கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துவிட்டனர். எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வேண்டும் என்று தாமதமாக வந்து, சாலை வழியாக அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தி, பெரிய நெரிசல் உண்டாக்கப்பட்டது. இதைத் தவிர்ப்பதற்காகத்தான் எஸ்ஓபி போடப்பட்டுள்ளது. இந்த எஸ்ஓபி என்பது எல்லா கட்சிகளுக்கும் பொதுவானது தான்.
திமுக, அதிமுக என அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்து தான் எஸ்ஓபி போடப்பட்டுள்ளது. இப்போது எப்படி விஜய் கூட்டம் ஒழுக்கமாக நடத்தப்படுகிறது. சொன்ன நேரத்திற்குச் செல்கிறார். கரூருக்கு ஏன் விஜய் தாமதமாகச் சென்றார். திருச்சியில் விஜயின் முதல் கூட்டம் நடந்ததில் இருந்தே இந்த கூட்ட நெரிசல் பிரச்சனை இருந்தது. கரூரில் இந்தப் பிரச்சனை வெடித்தது.
எஸ்ஓபி மூலமாக தவெக தலைவர் விஜயின் பிரசாரத்தை முடக்குவதற்கு தமிழ்நாடு அரசு சதி செய்கிறது என்பது நகைப்புக்குரிய விஷயம். இப்போது எதற்கு வரும் 12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும். 14 ஆம் தேதி வாக்கில் தேர்தல் அறிவிப்பு ஆணை வந்துவிடும். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி என்ன பயன்.
விஜயைப் பொருத்தவரை திமுகவை எதிர்க்க வேண்டும் என்பது தான். அந்த வகையில், திமுகவை எதிர்க்கும் இன்னொரு அணிக்கு விஜய் போவது தொடர்பான யூக செய்தியில் பிழை இருப்பதாக நான் கருதவில்லை. மக்கள் எப்போதும் விஜயை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விஜய், அதிமுக, பாஜக கூட்டணி என்பது தோல்வியை நோக்கியே செல்லும்.
குடும்பத்தையே அவர் வொர்த் இல்லை என்கிறார். அப்படி இருக்கையில், கொள்கை மட்டும் வொர்த் ஆகிவிடுமா. முன்பு எடுத்த நிலைப்பாடு இப்போது மாறிவிட்டது என்றால் அதை ஆதரிக்கவும் 10 பேர் விஜய்க்கு உள்ளனர். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது தான் லட்சியம், முதலமைச்சர் கனவை விஜய் தியாகம் செய்துவிட்டார் என்று கூட அவரது ரசிகர்கள் கூறுவார்கள்.
கோடிக்கணக்கிலான சம்பளத்தை விட்டுவிட்டு வந்துவிட்டார் என்று கூறுகின்றனர். விஜயின் எத்தனை படம் நடுவில் தோல்வி அடைந்தது. நல்ல படங்கள் ஓடும் அவ்வளவு தான். ரசிகர்களை வைத்து மட்டும் ஓடாது. என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் கிராமம் கிராமமாக வருகிறேன் என்கிறார் விஜய். கிராமம் கிராமமாக சென்றால்தானே முதலமைச்சராக முடியும். இது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை என்று கூறினார்.












Click it and Unblock the Notifications