விசிக, CPM, CPIஐ ஏமாற்றிய விஜய்.. தினகரன் மூலம் அம்பலமான நாடகம்.. புட்டு புட்டு வைத்த பத்திரிகையாளர்
சென்னை: தவெக தலைவர் விஜய் கூட்டணி கட்சிகளை ஏமாற்றி ஆட்சிக்கு வர முயற்சி செய்வதாக பிரபல பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் இந்திரகுமார் தேரடி சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.
நேற்று மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்த விஜய், தனக்கு பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், இந்த உரிமை கோரலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் ஆதரவு கடிதங்கள் இடம்பெறவில்லை. ஆனால் 120 எம்எல்ஏக்கள் ஆதரவை காட்டி மெஜாரிட்டி கணக்கு காட்டி இருந்தார். மாறாக, அமமுகவின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரான மன்னார்குடி காமராஜின் ஆதரவு கடிதம் இணைக்கப்பட்டிருந்தது. இதுவே பெரும் சர்ச்சைக்குப் புள்ளியாக அமைந்தது.

இதனால் விஜய் உண்மையில் மெஜாரிட்டி காட்டி உள்ளாரா என்பதே கேள்வியாக இருந்தது.
இது தொடர்பாக அரசியல் விமர்சகர் இந்திரா குமார் தேரடி செய்துள்ள போஸ்டில், அமமுக எம்.எல்.ஏவின் ஆதரவு இருப்பதாக தவெக ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. அதனை டிடிவி தினகரன் மற்றும் எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோர் மறுத்து ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர். சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காமராஜ் அவர்கள் கையெழுத்திட்ட வீடியோ என்று தவெக தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட்டதாக ANI ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதில் எது உண்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும். அமமுக எம்.எல்.ஏவிடம் ஆதரவு கோரிய செய்தியை விசிக மற்றும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தெரிவித்ததா? கூடுதலாக அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்களுக்கே தெரியாமல் ஓடும் வண்டியில் அவரிடம் கையெழுத்து வாங்கினோம் என்ற தகவலைத் தெரிவித்தார்களா?
அப்படி ஓடும் வண்டியில் நடுரோட்டில் வைத்து வாங்கிய கையெழுத்தை, வீடியோவாக எடுத்தவர்கள் ஏன் அதிகாரப்பூர்வமாக செய்தித்தொடர்பாளர் மூலமாகவோ பொதுச்செயலாளர் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ கட்சியின் சமூகவலைதளப் பக்கங்கள் மூலமாகவோ வெளியிடாமல் மூன்றாம் நபர்கள் மூலமாக வெளியிட்டுள்ளனர். செய்தியாளர்களைச் சந்தித்து இதனை உடனடியாக ஏன் விளக்கவில்லை? தூங்கிவிட்டோம் என்று சொன்னால் ஒரு குழந்தை கூட நம்பாது. எனில் காமராஜ் கையெழுத்துப் போடும் அந்த வீடியோவின் உண்மைத் தன்மை கேள்விக்குள்ளாகிறது.
1) அமமுக எம்.எல்.ஏவின் ஆதரவு இருப்பதாக தவெக ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. அதனை டிடிவி தினகரன் மற்றும் எம்.எல்.ஏ காமராஜ் ஆகியோர் மறுத்து ஆளுநரிடம் முறையிட்டுள்ளனர். சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
— Indra Kumar Theradi (@THE_INDRA_KUMAR) May 8, 2026
இந்நிலையில் காமராஜ் அவர்கள் கையெழுத்திட்ட வீடியோ என்று தவெக தரப்பில்… pic.twitter.com/hqrOlThffW
கையெழுத்து வாங்கியதையே விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தெரிவிக்கவில்லை என்றால் ஆட்சி அமைவதற்கு முன்பே கண்கட்டி வித்தையை தவெக தொடங்கிவிட்டது என்று தானே பொருள்? நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையை இது குழி தோண்டிப் புதைப்பதாகாதா?
2) தவெக ஆளுநரிடம் கொடுத்த கடிதம் என்ற பெயரில் ஒரு ஒன்று உலாவருகிறது. அதில் ஐ.யு.எம்.எல் -1 என உள்ளது. அதிகாரப்பூர்வமாக ஐ.யு.எம்.எல் மறுத்த நிலையில் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டது எப்படி? அதிலும் 2 எம்.எல்.ஏக்களில் ஒருவர் மட்டும் ஆதரவளித்தாரா? இல்லை இந்தப் படமே போலி என்றால் அதையாவது அதிகாரப்பூர்வமாக மறுக்க வேண்டாமா?
எதைத்தான் இவர்கள் அதிகாரப்பூர்வமாகச் செய்யப்போகின்றனர்? எப்போது செய்யப்போகின்றனர்? திமுகவிற்கு எதிரான வதந்தி என்று வந்தால் தவிர எதையும் பேச மாட்டோம் என்று முடிவில் இருக்கின்றனர் தவெகவினர்.
மேலும் மூத்த பத்திரிகையாளர் நடப்பதைப் பார்க்கமலே கண்டறிந்து செய்தி வெளியிடும் நாணய சிகாமணி இந்த கையெழுத்து கோல்மால் குறித்து, "மோசடி கையெழுத்துடன் விஜய் - மொத்தமாக முடித்துவிட்ட டி.டி.வி" என்று தலைப்பை வைத்துவிட்டாரா இல்லையா? திமுகவின் மீது மக்களின் வெறுப்பைத் தூண்டும் செய்தியை மட்டும் வெளியிடுவது என்று தீர்மானகரமாக வாய்ஸ் ஆஃப் மாமனாருக்கு எதுவும் வாக்குக் கொடுத்துவிட்டாரா என்ன? அதைவேறு வீடியோ எதாவது எடுத்தாலும் எடுத்திருப்பார்கள் போல, என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications