என்னது வாக்காளர்கள் பணம் வாங்கணுமா.. உளறி கொட்டிய விஜய்.. சிபிஐ வீரபாண்டியன் புகாரால் தவெக ஷாக்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக எதிர்ப்பு அரசியலை மையப்படுத்தி தவெக விஜய் களம் காண்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜய் உளறி கொட்டியதை பாயின்டாக பிடித்த சிபிஐ வீரபாண்டியன் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது தவெகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அந்தக் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், "இந்த தேர்தலில் தமிழகத்திற்கும், ஒன்றிய அரசின் அதிகார குவியலற்கும் இடையே நடக்கும் அதிகார போர். இதில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். அவர்களுடன் அணி சேருவோர் தோற்கடிக்க வேண்டும். திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. நாங்கள் வெல்வோம்.

மதச்சார்பின்மை பூமி
பல திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையும் மக்களிடம் சென்றுள்ளது. நாங்கள் நிச்சயம் வெல்வோம். தமிழ் மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. மதவாதத்தை மக்கள் விரும்ப மாட்டார்கள். தமிழ் பூமி பண்பட்ட கலச்சார பூமி. இங்கு மத வழிபாடுகளுக்கு இடமுள்ளது. அறிவியலுடன் பண்பட்ட கலாச்சாரம் இங்குள்ளது. இதை சிதைப்பதற்கு பாஜக நினைக்கிறது. மதுரை மக்கள் பாஜகவிற்கு உரிய பாடத்தை வழங்கியுள்ளனர். உலகத்தில் வேறு எங்குமில்லாளவுக்கு மதச்சார்பின்மை இங்குள்ளது.
மீண்டும் ஸ்டாலின்
அதை பாஜக வீழ்த்த நினைக்கிறது. அதனால் நாங்கள் பாஜக மற்றும் அவர்களுடன் கூட்டணியில் உள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளை வீழ்த்த நினைக்கிறோம். தமிழ் பண்பாட்டு விழுமியங்களை முன்னெடுக்க விரும்புகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார். எங்கள் அறிவிப்புகளை அமல்படுத்த திமுகவிடம் வலியுறுத்துவோம். இந்தியாவின் பன்முகம் என்பது ஒட்டுப்போடப்பட்டது என்று பிரதமர் சொல்கிறார்.
விஜய் மீது நடவடிக்கை
அதை கேட்க சொல்லுங்கள். சுயேச்சை நின்றாலும் ஜனநாயகத்தில் மதிப்போம். விஜய் பொருட்டல்ல என்று நாங்கள் கூற மாட்டோம். பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசில் ஊதி அனுப்புங்கள் என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் அப்பட்டமான செயல். இது ஜனநாயகத்தை சிதைக்கும். வாக்காளர்களை பணம் வாங்க சொன்ன விஜய் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
மாட்டிக்கிட்ட பங்கு..பயிர்க் கடன் தள்ளுபடி! ரூல்ஸ் தெரியாமல் சிக்கிய விஜய்! நேக்காக எஸ்கேப்பான திமுக -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை!












Click it and Unblock the Notifications