Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்களை எதிர்த்தா.. அவ்வளவுதான்.. சி.கா குடும்பத்தை கூட கண்டபடி தாக்கும் தவெக தலைகள்.. விஜய் மௌனம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி.. அஜித்தை விடாமல் தாக்கி குடும்பத்தினர் வரை கடுமையாக விமர்சனம் செய்த விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் தற்போது சிவகார்த்திகேயனை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். அதோடு பராசக்தி படம் நன்றாக இருப்பதாக கூறியவர்களையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட போது தமிழக அரசியலில் பெரிய புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கட்சியோ அடுத்தடுத்து பல்வேறு தவறுகளை செய்துகொண்டு இருக்கிறது. கரூர் விவகாரத்தை அந்த கட்சி சரியாக கையாளவில்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது. இப்போது விஜய் ரசிகர்களே அவருக்கு எதிராக வேலைகளை செய்ய தொடங்கி விட்டனர்.

vijay parasakthi tvk

விஜய் ரசிகர்கள் செயல்

என்னதான் விஜய் கூட்டணி விவகாரங்களில் சொதப்பினாலும் அவருக்கு அரசியலில் கொஞ்சம் குட் மார்க் கொடுக்கலாம். ஏனென்றால் அரசியலுக்கு புதிது. புதிதாக இப்படி எல்லாம் தவறுகள் சகஜம்தான். அவர் குட்டாக இருந்தாலும் அவரின் ரசிகர்கள் செய்யும் பேட் விஷயங்களால் அந்த கட்சி தற்போது மோசமான நிலைக்கு.. அதாங்க அருவருப்பான நிலைக்கு செல்ல தொடங்கி உள்ளது. நடிகர் விஜய் .. அரசியல்வாதி ஆக தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். அவர் தவெக கட்சியை தொடங்கிய நிலையிலும் கூட.. அவரின் ரசிகர்கள் இன்னும் ரசிக மனோபாவத்தில் இருந்து வெளியே வராமல்.. சினிமா சண்டை போட்டுகொண்டு உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள்.. இல்லை இல்லை ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு எதிராக ரசிக ஹேஷ்டாக் சண்டை போட்டுக்கொண்டு உள்ளனர். இப்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படத்தை கிண்டல் செய்வதை தாண்டி சிவகார்த்திகேயனின் குடும்பத்தை மோசமாக கிண்டல்ஸ் செய்கின்றனர்.

சிவகார்த்திகேயனின் மனைவியை மார்ப் செய்து வீடியோ போடுவது, சிவகார்த்திகேயனின் குடும்பத்தை அசிங்கப்படுத்தும் வகையில் வீடியோ போடுவது, அவரை மிக மோசமாக திட்டி வீடியோ போடுவது என்று கீழ்த்தரமான நிலைக்கு சென்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதோடு படத்திற்கு ஆதரவாக போஸ்ட் செய்த.. ரிவ்யூ செய்த எல்லோரையும் மிக மோசமாக விமர்சனம் செய்வது, குடும்பத்தை விமர்சனம் செய்வது என்று தரம் தாழ்ந்து போஸ்ட் செய்து கொண்டு இருக்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம்.. விஜயின் கடைசி படமான ஜனநாயகம் படத்துடன் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் மோத இருந்ததே என்கிறார்கள். எங்களுக்கு எதிராக படமே வரக்கூடாது என்பதுதான் சிஎம் ஆக ஆசைப்படும் விஜயின் ரசிகர்களின் நிலைப்பாடு.. அப்படி வந்தால் குடும்பம் வரை சென்று தாக்குவோம்.. என்பதே அவர்களின் கொள்கை போல..

கூலி படம்

இதேபோல்தான் கூலி படத்திற்கு எதிராகவும் கடுமையான பிரச்சாரங்களை விஜய் ரசிகர்கள் செய்தனர். இந்தப் படத்திற்கு விஜய் ரசிகர்கள் கடுமையான எதிர்மறையான விமர்சனங்களை வைத்தனர். படம் பொதுமக்கள் இடையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் கூட விஜய் ரசிகர்கள் அதை கிண்டல் செய்யும் விதம் மோசமாக இருந்தது. முக்கியமாக லோகேஷ் - விஜய் காம்போவில் வந்த லியோ படம் இதை விட நன்றாக இருந்தது என்று விஜய் ரசிகர்கள் பலரும் தியேட்டர் வாசலில் விமர்சனங்களை வைத்தனர். அவர்களின் இந்த விமர்சனம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கே சிக்கலாக மாற தொடங்கி உள்ளது. கூலி படம் ஓடும் திரையரங்குகளுக்கு வெளியே பல விஜய் ரசிகர்கள் படம் குறித்து கடுமையாக நெகட்டிவ் விமர்சனங்களை வைத்தனர்.

கூலி படம் குறித்து யூ டியூப் சேனல்களிடமும் தொலைகாட்சி அலைவரிசைகள் மற்றும் செய்தியாளர்களிடமும் மிக கடுமையான எதிர்மறை விமர்சனங்களை வைத்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூலி படம் மூலம் வந்த சிக்கல்

கூலி படம் குறித்து விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களில், மீம்ஸ்கள், கிண்டலான பதிவுகள் மற்றும் கடுமையான விமர்சனங்களுடன் கேலி செய்வது அதிகரித்துள்ளது. இது அரசியல் நோக்கர்கள் மத்தியில் TVK-விற்கு எதிர்காலத்தில் சிக்கல்களை உருவாக்கலாம் என்ற கருத்தை எழுப்பியுள்ளது.

ரஜினிகாந்திற்கு தமிழகத்தில் இன்றும் வலுவான மற்றும் விசுவாசமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரஜினி ரசிகர்கள் தாங்கள் தாக்கப்பட்டதாகவோ அல்லது அவமதிக்கப்பட்டதாகவோ உணர்ந்தால், தேர்தல்களில் விஜய்யின் கட்சிக்கு எதிராக வாக்களித்து பழிவாங்கலாம் என்று கூறப்படுகிறது. இதை ரஜினி ரசிகர்களே தியேட்டர் வாசல்களில் பேட்டிகளில் கூறுகின்றனர். விஜய் ரசிகர்கள் தவறாக விமர்சனம் செய்தால்.. அவர்களிடம் போய் இதுக்குத்தான் உங்க கட்சியை எவனும் கண்டுக்கல.. நாங்க உங்களுக்கு வாக்கு அளிக்கணுமா , வேண்டாமா என்று கேள்வி எழுப்புகின்றனர். இதன் காரணமாகவே இப்போது விஜய்க்கு எதிராக களமிறங்க ரஜினி ரசிகர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.

ஏற்கனவே அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் போதும் இப்படி செய்தார்கள். இது மாஸ்டர் படம் போன்ற விஜயின் டீசர் ரெக்கார்ட்களை முறியடித்து உள்ளது. அதேபோல் வசூல் ரெக்கார்டுகளிலும் அசதி உள்ளது. ஒரே நாளில் பல மில்லியன்ஸ் வியூஸ்களை பெற்றுள்ளது. தினமும் வசூலிலும் கலக்கி உள்ளது, இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள்.. அதாவது விஜய் ரசிகர்கள்.. அந்த கிண்டல் செய்கின்றனர்.

மோசமான சினிமா சண்டை

முக்கியமாக தொடர் விமர்சனம்.. கடுமையான பர்சனல் அட்டாக் கூட செய்கின்றனர். யார் செய்வது என்று ப்ரோபைலை பார்த்தால் அங்கே தவெக கொடி. மாஸ்டர் இப்போ வந்தால் அதைவிட பெரிய ஹிட் அடிக்கும். விஜயின் கடைசி படத்திற்கு பாருங்கள்.. எவ்வளவு வியூஸ் வருகிறது என்று.. அப்போ புரியும் என்று கூறி வருகின்றனர். அஜித்தே சினிமாவில் பெரிதாக கவனம் செலுத்துவது இல்லை. பட்டங்களை துறந்தவர்.. கடவுளே அஜித்தே போன்ற வசனங்களையும் விரும்புவது இல்லை.

அப்படி இருக்க அவர் விஜயை போட்டியாகவும் பார்ப்பது இல்லை. ஆனால் விஜய் அரசியலுக்கு சென்றும் கூட.. அஜித்தை போட்டியாக கருதி விஜய் ரசிகர்கள் போஸ்ட் செய்கின்றனர். தமிழ்நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கும் போது விஜய் தனது ரசிகர்களை, தொண்டர்களை அதை பற்றி பேச வேண்டும் என்று ஊக்குவிக்க வேண்டும்.

ஆனால் விஜயும் அப்படி எதுவும் செய்ததாக தெரியவில்லை. பாசிசமும், பாயாசமும்
செட்டிங் வைத்து எல்கேஜி பாய்ஸ் போல விளையாடுகிறார்கள் என்று சொல்லும் விஜய்.. தனது ரசிகர்களின் விளையாட்டுகளை கேள்வி கேட்காமல் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் ஒரு அஜித் படம் வந்தால் போது விஜய் கட்சி காலி.. ரசிகர்களே கட்சியின் தோல்வியை உறுதி செய்துவிடுவார்கள் என்று கிண்டலடிக்கும் நிலையில்தான் அவரின் ரசிகர்களின் செயல் உள்ளது.

அஜித் படத்தை எதிர்க்கும் அதே வீரியத்தை விஜய் ரசிகர்கள் இதுவரை சமூக பிரச்சனை எதற்கும் பெரிதாக காட்டவில்லை. சாலையில் இருக்கும் குழியை அடைத்து ரீல்ஸ் போடுவதே அரசியல்.. அஜித் படத்தை எதிர்த்து களத்தில் சண்டை செய்வதே அரசியல் என்று நினைக்கிறார்கள் விஜய் பேன்ஸ். ஒரு விழாவில் தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம்.. ப்ரோ நீங்கதான் சினிமா வந்துடீங்களா இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பார் விஜய். அதை விஜய் அவரின் ரசிகர்களிடம் ப்ரோ.. நாமதான் அரசியலுக்கு வந்துட்டோமே இங்கே என்ன பண்ணுறீங்க என்று சினிமா சண்டை போடும் ரசிகர்களிடம் கேட்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+