துல்லியமாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. ஸ்டன் ஆகி நின்ற விஜய்.. வெலவெலத்து நிற்கும் தவெக கூடாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்த பின்பும் கூட முதல்வர் ஸ்டாலின் இதுவரை அக்கட்சிக்கு எதிராக பெரிய ஆக்சன் எடுக்க உத்தரவிடவில்லை. இது தவெக விஜய் தரப்பை குழப்பத்திற்கு ஆழ்த்தி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

TVK Vijay

கரூர் கேசில் கோர்ட் போட்ட உத்தரவு

கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை. விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. விஜய் தொண்டர்கள் ரசிகர்கள் மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார். அதேபோல் விஜய் பிரச்சார ஏற்பாட்டாளர்கள் மீது கருணை காட்டாதீர்கள். வழக்கு பதிவு செய்க,. நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசு ஆதவ் அர்ஜூனா டெலிட் செய்யப்பட்ட போஸ்டை காட்டிய நிலையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஆதவ் அர்ஜுனா போட்ட பதிவு குறித்து விசாரிக்க வேண்டும். அதன் பின்புலத்தை விசாரிக்க வேண்டும். எதன் அடிப்படையில் போஸ்ட் செய்யப்பட்டது. இவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், எனவே இந்த சம்பவத்தில் அரசு அமைதியாக இருக்கக்கூடாது

சட்ட பூர்வமாக அவர் மீது ஆக்சன் எடுங்கள். ஏன் கருணை காட்டுகிறீர்கள். அவர் மீது ஆக்சன் எடுங்கள். ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி விடும். நீதிமன்றம் அனைத்தையம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. தேவையான நேரங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுங்கள். நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின.

இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? நீதிமன்றம் கண் மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவிற்காக காத்து இருக்காதீர்கள். நீங்களே நடவடிக்கை எடுங்கள். அவர் புரட்சி ஏற்படுத்தும் விதமாக போஸ்ட் செய்துள்ளார். எப்படி பார்த்துக்கொண்டு இருந்தீர்கள். பொறுப்பற்ற இது போன்ற பேச்சுக்களை உடனே களைய வேண்டும், என்று கோர்ட் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஸ்டாலின் ஆக்சன் இல்லை

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வைத்த பின்பும் கூட முதல்வர் ஸ்டாலின் இதுவரை அக்கட்சிக்கு எதிராக பெரிய ஆக்சன் எடுக்க உத்தரவிடவில்லை. இது தவெக விஜய் தரப்பை குழப்பத்திற்கு ஆழ்த்தி உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவே ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால்.. விஜயை திருச்சியில் வைத்தே கைது செய்து இருப்பார். ஆனால் ஸ்டாலின் இங்கே சுதாரித்துக்கொண்டார். விஜயை கைது செய்தால் அது கரூர் பிரச்சனையாக இல்லாமல் அரசியல் பிரச்சனை ஆகிவிடும். அது விஜய்க்குத்தான் மைலேஜ் தரும்.

விஜய் ரசிகர்கள், சில மக்கள் கூட இதை விஜய்க்கு சாதகமாக பார்த்துவிடுவார்கள். விஜய்க்கு அரசியல் ரீதியாக சாதகமாக மாறிவிடும். இதனால் உச்ச நீதிமன்றம் போன்ற மேல் கோர்ட் உத்தரவிட்டால் பார்க்கலாம். அதுவரை நாமே இறங்கி கைது செய்ய வேண்டாம் என்று ஸ்டாலின் பொறுமையாக இருக்கிறாராம். விஜய்க்கு இது சாதகமாக போக கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.

விஜய் ஏமாற்றம்

ஸ்டாலின் தன் மீது ஆக்சன் எடுத்தால்.. அது பெரிய அரசியல் மைலேஜ் தரும் என்பதை உணர்ந்துதான் விஜய்.. முடிந்தால் என்னை தொட்டுப்பாருங்கள் என்றெல்லாம் பேசினார். ஆனால் அதை மக்களே விரும்பவில்லை. ஸ்டாலினும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

விஜய் இப்படி வம்பிழுத்ததை கண்டுகொள்ளாமல்.. கோர்ட் சொல்வதை மட்டும் செய்வோம் என்று ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார். ஸ்டாலின் கவனமாக எடுக்கும் இந்த முடிவுகளால்.. விஜய் தரப்பு இந்த விவகாரத்தில் அரசியல் மைலேஜ் கிடைக்காமல் கொஞ்சம் ஸ்டன் ஆகி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+