லாக்-அப் மரணத்திற்காக போராட வந்துவிட்டு.. பாதிக்கப்பட்டவர் பெயரையே மாற்றி சொன்ன விஜய்!
சென்னை: நேற்று தமிழக வெற்றிக் கழகம் நடத்திய முதல் போராட்டத்தில் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வரிசையாக பல விஷயங்களில் தவறுகளை செய்தது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
போலீஸ் கஸ்டடி மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நேற்று மேடை ஏற்றினர். தவெக பேரணியில் இவர்கள் மேடை ஏற்றப்பட்டதோடு.. பாதிக்கப்பட்டவர்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டது. கட்சி தலைவர் விஜய் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மேடை ஏற்றப்பட்டனர்.

இந்த நிகழ்வில், விஜய் தனது பேச்சில், மடப்புரம் அஜித் குமார் எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். சாதாரண குடும்பத்திற்கு நடத்த கொடுமைக்கு நீதி வேண்டும். ஏற்கனவே சாரி சொல்லிட்டீங்க - 24 பேரின் குடும்பத்துக்கும் சாரி சொல்லிடுங்க. அஜித் குமார் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்தது போல இங்கேயும் கொடுங்கள். சாத்தான்குளம் மரணத்தை விமர்சனம் செய்தீர்களே.. சாத்தான்குளத்தில் ஜெபராஜ் - பெனிக்ஸ் வழக்கில் சிபிஐக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தீர்களே.. இப்போது நீங்கள் செய்வது என்ன சார்?
அதே ஆர்எஸ்எஸ் உடன் கைகோர்த்து இருக்கும் சிபிஐ கிட்ட போய் ஏன் ஒளிஞ்சுக்கிட்டீங்க? ஏன் எஸ்ஐடி அமைக்கவில்லை?. ஒன்றிய அரசின் ஆட்சிக்கு பின் ஏன் ஒளிந்து கொள்கிறீர்கள். உங்களை நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கணும்னா நீங்க எதுக்கு சார்?. உங்க ஆட்சி எதுக்கு சார்? சிஎம் பதவி எதுக்கு சார்?
உங்களிடம் பதில் இருக்காது- நீங்கள் சாரிதான் சொல்வீர்கள். நீங்கள் சாரி மட்டும்தான் சொல்ல முடியும்.. உங்களால் வேறு என்ன சொல்ல முடியும்.. உங்கள் ஆட்சி சாரி மாடல் ஆட்சியாக மாறிவிட்டது., என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசி உள்ளார்.

விஜய் செய்த தவறு
நேற்று விஜய் தனது பேச்சில், சாத்தான்குளம் மரணத்தை விமர்சனம் செய்தீர்களே.. சாத்தான்குளத்தில் ஜெபராஜ் - பெனிக்ஸ் வழக்கில் சிபிஐக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தீர்களே.. இப்போது நீங்கள் செய்வது என்ன சார்? என்று கூறினார். ஆனால் அதிமுக ஆட்சியில் கொல்லப்பட்ட சாத்தான்குளம் நபர்களின் பெயர் ஜெயராஜ் - பெனிக்ஸ். ஆனால் இதை ஜெபராஜ் என்று விஜய் தவறாக குறிப்பிட்டார்.
எதெ ஜெபராஜ் பெனிக்சா? டேய் அவரு பேரு ஜெபராஜ் இல்ல ஜெயராஜ்.. தமிழ்நாடு முழுக்க பேசப்பட்ட ஒரு லாக்கப் டெத் கேஸ்தான் ஜெயராஜ் பெனிக்ஸ். அந்த பேரே உனக்கு தெரியல.. நீதான் முதல்வரா வந்து தமிழ்நாட்ட பொரட்டிப்போட போறியா? கெரகம்டா.. முதல்ல கேஸ் டீட்டெய்ல படிச்சிட்டு வா போ @TVKVijayHQ pic.twitter.com/33pjfsaeFC
— U2 Brutus (@U2Brutus_off) July 13, 2025
கஸ்டடி மரணம் பற்றி பேசும் விஜய்.. அதை பற்றிய போராட்டத்தில்.. கஸ்டடி மரணம் பற்றி தமிழ்நாட்டிற்கே அறிந்த பெரிய வழக்கு ஒன்றின் பெயரை தவறாக குறிப்பிட்ட உள்ளார். பொதுவாக விஜய் பெரிய ஷீட் ஒன்றை வைத்து பேசும் வழக்கம் கொண்டவர். நேற்று அப்படி எதுவும் இல்லாமல் பேசிய விஜய், தனது பேச்சில் தவறு செய்துள்ளார்.
அவரின் இந்த நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஜெபராஜ் பெனிக்சா? அவரு பேரு ஜெபராஜ் இல்ல ஜெயராஜ்.. தமிழ்நாடு முழுக்க பேசப்பட்ட ஒரு லாக்கப் டெத் கேஸ்தான் ஜெயராஜ் பெனிக்ஸ். அந்த பேரே உங்களுக்கு தெரியல.. நீங்கதான் முதல்வரா வந்து தமிழ்நாட்டை புரட்டி போட போறீங்களா? கெரகம்.. முதல்ல கேஸ் டீட்டெய்ல படிச்சிட்டு வா போ.. தப்பு தப்பா பொய் தகவலை பேசுறது மட்டும் இல்லாம ஜெயராஜை ஜெபராஜ் சொல்லிட்டு இருக்காங்க என்று நெட்டிசன்கள் பலர் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications