கிடைச்ச சான்சை எல்லாம் மிஸ் பண்ணிட்டாரே.. சொதப்பிய தவெக விஜய்.. இப்போ பாருங்க பெரிய சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் அடுத்தடுத்து கிடைத்த பல வாய்ப்புகளை தவறவிட்டு விஜய் கடுமையாக சொதப்பி உள்ளார். தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு கிடைத்த முக்கியமான சில வாய்ப்புகளை விஜய் நழுவவிட்டு உள்ளார்.

தமிழக அரசியலில் அதிக எதிர்பார்ப்போடு தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கினார். கட்சி தொடங்கி 1 வருடம் கடந்துவிட்டது. ஆனாலும் கூட இதுவரை கட்சி பெரிதாக ஆக்கப்பூர்வமான விஷயங்களை அல்லது அரசியலில் திருப்பம் ஏற்படுத்தும் விஷயங்களை செய்யவில்லை. முக்கியமாக விஜய் தனக்கு வந்த வாய்ப்புகளை தவறவிட்டுள்ளார். அவற்றை இங்கே பார்க்கலாம்.

Edappadi Palaniswami vijay

1. விசிக கூட்டணி வாய்ப்பு

விஜய்க்கு விசிக உடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு இருந்தது. விசிகவில் ஆதவ் அர்ஜுனா இருந்த போதே கூட்டணிக்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் விஜய் அவசரப்பட்டு சில மேடைகளில் விசிக - திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்று பேசினார்.

பொதுவாக கூட்டணி எல்லாம் திரை மறைவில் பேசப்பட வேண்டும். ஆனால விஜய் பக்குவம் இன்றி திருமாவை பற்றி மேடையிலேயே பேசி சொதப்பினார். திருமா கூட்டணி வருவதற்கு பதிலாக ஆதவ் அர்ஜுனனை நீக்கும் நிலைக்கு போனார். விஜய்க்கு விசிகவில் இருந்த ஒரே தொடர்பும் அறுந்து போகும் நிலை இதனால் ஏற்பட்டது. மற்ற பழுத்த அரசியல்வாதிகள் தேர்தல் வரை காத்திருந்து இந்த முடிவுகளை எடுப்பார்கள். ஆனால் விஜய் இங்கேதான் அவசரப்பட்டார்.

2. அதிமுக கூட்டணி சொதப்பல்

தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு புதிது என்பதால் அதிமுக கூட்டணி வந்த போதே அதை ஏற்காமல் மிஸ் செய்துள்ளார். அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

3. அதிகம் ஆசைப்பட்ட விஜய்?

இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு எடப்பாடி தரப்பிடம் பேசுகையில், எங்களுக்கு பெரிய பலம் உள்ளது. முக்கியமாக 15 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு வங்கி உள்ளதாக எங்கள் சர்வே சொல்கிறது. அதனால் 117 இடங்கள் எங்களுக்கு தேவை, என்று விஜய் தரப்பி பேசி இருக்கிறதாம். இதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் கூட்டணி சேரவில்லை.

4. தனித்து விடப்படும் விஜய்

இதனால் விஜய் தனித்து விடப்படும் நிலை ஏற்படலாம். அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்துள்ளதால் அந்த வாக்குகள் அப்படியே அவர்களுக்கு போகும். பாமக, தேமுதிகவும் இவர்கள் பக்கமே போக வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணி வாக்குகள் ஒரு பக்கம் அப்படியே இருக்கும். சீமான் தனது பங்கிற்கு 8% வாக்குகளை எடுத்துக்கொள்வார். இளைஞர்கள் சிலரின் வாக்குகளை தவிர விஜய்க்கு பெரிய அளவில் வாக்குகள் போகாத நிலை ஏற்படலாம்.

அதிமுக - பாஜக கூட்டணி உருவானால் அவர்களின் கூட்டணி பலமாகும். இது அதிக வாக்குகளை எடுக்க விரும்பும் விஜய்க்கு பெரிய சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

5. நான்கு முனை போட்டியை உருவாக்கிய விஜய்

விஜய் இதுவரை கூட்டணியை உருவாக்கததால் 4 முனை போட்டியை இந்த முறை உருவாக்கி உள்ளார். நாம் தமிழர் - பாஜக எதிர் எதிரெதிர் கொள்கைகள் கொண்ட கட்சி. விஜய் வேறு தலைமையிலான.. அதாவது எடப்பாடி தலைமையிலான கூட்டணிக்கு வர மாட்டார். இதனால் 4 முனை போட்டி.. அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி , தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவும். இந்த 4 முனை போட்டி பொதுவாக ஆளும் கட்சிகளுக்கே சாதகம். அதாவது 4 முனை போட்டியால்.. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் 3 முனையாக பிரியும். அதாவது திமுகவிற்கு எதிராக செல்ல வேண்டிய வாக்குகள் 3 பக்கங்களில் பிரியும். இதனால் எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைப்பது கஷ்டம். ஜெயலலிதா 2016ல் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரித்த மக்கள் நல கூட்டணி காரணமாக இப்படித்தான் வென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+