மறுதேர்தல் வேண்டாம்.. திமுக கூட்டணியை உடைப்போம்.. விஜயின் மாஸ்டர்பிளான்.. தவெக சீக்ரெட் மூவ்
சென்னை: தவெகதான் ஆட்சியைப் பிடிக்கிறது; முதலமைச்சர் ஆகிறார் விஜய் என்கிற அசாத்திய நம்பிக்கையில் இருக்கிறார்கள் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். இதனை விஜய்யின் மனதில் புகுத்தி வைத்திருப்பதால் விஜய்யின் நம்பிக்கையும் அதுவாகத்தான் இருக்கிறது.
தேர்தல் முடிவுகள் நாளைக்கு ரிலீசாகும் நிலையில் நேற்று இரவு கட்சியின் முதல் நிலை நிர்வாகிகளிடம் நீண்ட நேரம் ஆலோசித்துள்ளார் விஜய். அப்போது, தேர்தல் முடிவுகளையொட்டி என்ன மாதிரி முடிவுகளை நாம் தீர்மாணிக்க வேண்டும் என்கிற ஆலோசனைதான் அதிகம் விவாதிக்கப்பட்டது.

அதாவது, "தேர்தல் முடிவுகளில் நமக்கு பெரும்பான்மைக் கிடைத்து விட்டால் எந்த குழப்பங்களும் வரப்போவதில்லை. பெரும்பான்மை கிடைக்காமல், கனிசமான சீட்டுகள் மட்டுமே கிடைத்தால் என்ன மாதிரி முடிவை எடுக்கலாம் என நீங்கள் யோசிக்கிறீர்கள்?" என்று கேட்டிருக்கிறார் விஜய்.
அப்போது, "சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டி எங்கிற அந்தஸ்து நமக்கு கிடைத்தால், குறிப்பாக, 100 சீட்டுகள் நமக்கு கிடைக்கிறது என வைத்துக் கொண்டால், கூட்டணி ஆட்சி அமைக்க நாம் முயற்சிக் கலாம். கூட்டணி ஆட்சி அமைக்க 18 சீட் அவசியம். அப்போது நாம் ஆதரவு கேட்கக் கூடிய முதல் கட்சி காங்கிரஸ் தான். அதாவது, திமுக வின் தோழமைக்கட்சிகளிடம் 20 சீட்டுகள் இருக்கும் பட்சத்தில் அவர் களை அணுகுவதை முதல் வாய்ப்பாக வைத்துக்கொள்ளலாம்.
நிச்சயம் திமுகவை விட்டுவிட்டு நம்மை ஆதரிக்க அவர்கள் முன் வருவார்கள். அதனால் அவர்களின் ஆதரவை நாம் கேட்டுப்பெறுவதில் தவறில்லை. திமுக கூட்டணி கட்சிகள் ஒத்துழைக்க மறுத்தால், அதிமுக கூட்டணி மீது நம் பார்வையை திருப்பலாம். 100 சீட்டுகள் கிடைக்கிற போது, அதாவது சிங்கள் லார்ஜஸ்ட் கட்சியாக நாம் இருந்தால் மட்டுமே இந்த வாய்ப்புகளை ஆலோசிக்க வேண்டும். அப்போது, பாஜகவை தவிர்த்து அதிமுக எடுக்கும் நிலைப்பாட்டை வைத்து நமது நிலைப்பாட்டை தீர்மாணிக்கலாம். எதையும் வெளிப் படையாக இப்போதே லீக் பண்ணிட வேண்டாம். அதிகாரப்பூர்வமற்ற வகையில் கூட அதிமுகவிடம் பேசிடக் கூடாது.
ஒருவேளை சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டியாக நாம் வரமுடியாமல், 40, 50 சீட்டுகள் மட்டுமே கிடைக்கிற சூழல் உருவாகும் பட்சத்திலும், திமுக - அதிமுக கட்சிகளுக்கு பெரும்பான்மைக் கிடைக்காத பட்சத்திலும் துருப்பு சீட்டு நாமாகத்தான் இருப்போம். அதாவது, நமது ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அந்த நிலை உருவா னால், யாருக்கும் ஆதரவு தெரிக்காமல் இருந்து விடலாம். ஒருவேளை மறு தேர்தல் நடத்துவதற்கு அதுவே வாய்ப்பாக கூட அமையலாம். மறு தேர்தலில் நமக்கு மெஜாரிட்டி சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
மறு தேர்தலுக்கு நாம் காரணமாகக்கூடாது என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்தால், பாஜக அல்லாத அதிமுகவால் ஆட்சி அமைக்க முடியாத நிலையிருப்பின், பாஜகவை உதறிவிட்டு நம்மிடம் அவர்கள் ஆதரவு கோரினால், வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் முடிவை நாம் எடுக்க வேண்டும். அந்த முடிவு உங்கள் மீது மிகுந்த இமேஜ்ஜை உருவாக்கும். வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்பதைத் தவிர்த்து, அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சிக்குள் நாம் செல்ல வேண்டும். அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை வைத்து எதிர்கால அரசியலை திட்டமிடலாம் "என்று பல்வேறு ஆலோசனைகளை விஜய்க்கு வழங்கியிருக்கிறார்கள்.
தேர்ந்த அரசியல் கட்சிகளைப் போல, தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்பதால் அதனை வைத்து பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து வருகிறது விஜய் டீம் ! அதன் முதல் ஆலோசனை நேற்று நடந்து முடிந்திருக்கிறது என்கிறார்கள் தவெகவினர்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications