Vijay: விஜய் நியமித்த அந்த 14 பேர்! தவெகவின் ஸ்ட்ராங் ரூம்! ஆதவ் அர்ஜுனா சொன்ன முக்கிய தகவல்!
சென்னை: தேர்தல் முடிவுகள் நெருங்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் அறிவித்த அந்த 14 பேர் குறித்தும் அவர்களின் பணி குறித்தும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்', தனது உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பரபரப்பான பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர் விஜய் , அண்மையில் நியமித்த 14 முக்கிய நிர்வாகிகள் குறித்து விளக்கமளித்த ஆதவ் அர்ஜுனா, கட்சியின் ஒவ்வொரு நகர்வும் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு வேட்பாளர்களுக்கு 14 பேர் வீதம் 234 (எடப்பாடி தொகுதியில் விஜய் ஆதரித்த சுயேச்சை) தொகுதிகளுக்கும் நாளைக்குள் ஆட்களை தேர்வு செய்ய சொல்லியிருக்கிறார்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பணிகளை விஜய்யும், அடுத்த கட்ட தலைவர்களும் முழுவீச்சில் செய்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு வாக்குக் கூட வீணாகக் கூடாது.
ஏனென்றால் மக்கள் விஜய் முதல்வராக வேண்டும் என தவெகவுக்கு வாக்களித்துள்ளார்கள். எனவே வாக்கு எண்ணிக்கையின் போது தவெகவுக்கு போட்ட வாக்குகள் சரியாக உள்ளதா என்பதை கணக்கு பார்க்கும்படி வேட்பாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
நம்பிக்கைக்குரியவர்கள், டேட்டா குறித்து தெரிந்தவர்கள் வாக்களிக்கும் போது இருக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக தேர்தல் களமே மாறியிருந்தது. தவெகவின் ஸ்ட்ராங் ரூமிற்கு ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கு ஒருவர் என ஆள் நியமிக்கப்பட்டுள்ளது. 3 ஷிப்ட் அடிப்படையில் ஸ்ட்ராங் ரூமை கண்காணித்து வருகிறார்கள். வாக்குக்கு பணம் என்பதை முறியடித்து விஜய் சொன்னது போல் மாற்றத்திற்கான பயணம் என்ற பெயரில் ஒவ்வொரு வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். ஒரு புரட்சியை உண்டாக்கியிருக்கிறார்கள் என்றார்.
கட்சியின் ஒட்டுமொத்த கவனமும் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே உள்ளது. தமிழகத்தில் ஒரு வலுவான மாற்றத்தை ஏற்படுத்துவதே விஜய்யின் பிரதான நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் எழுச்சி: சமூக வலைதளங்கள் மற்றும் களப்பணி மூலம் இளைஞர்களை அதிகளவில் அரசியலுக்குக் கொண்டு வருவதே தங்கள் வியூகம் என்றார்.
ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications