தடுமாறிய விஜய்.. சென்னையில் பிரசார வாகனத்தின் மேலே இருந்து தவறி கீழே விழுந்தார்.. பதறிய பவுன்சர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னையில் ரோடுஷோவில் ஈடுபட்டு தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பிரசார வாகனத்தின் மேலே நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்து வாக்கு சேகரித்த விஜய் திடீரென தடுமாறி கீழே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். நாளை மாலை 6 மணிக்கு பிரசாரம் முடிகிறது.

tvk-vijay-standing-atop-a-campaign-vehicle-suddenly-lost-his-balance-and-fell-in-chennai

இதனால் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருவள்ளூர், சென்னையில் இன்று பிரசாரம் செய்தார்.

இன்று காலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பஞ்செட்டியில் ரோடுஷோ நடத்தினார். அதன்பிறகு மாலை 3 மணியில் இருந்து சென்னையில் வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளில் ரோடுஷோ சென்று தவெக வேட்பாளர்களுக்கு விஜய் ஆதரவு திரட்டினார்.

இந்த வேளையில் விஜய் பிரசார வாகனத்தின் மேலே ஏறி நின்று சுற்றி சூழ்ந்திருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்து வாக்கு சேகரித்தார். அதன்பிறகு பிரசார வாகனத்தின் மேல்பகுதியில் இருந்து வாகனத்தின் உள்ளே இறங்கி செல்ல விஜய் முயன்றார்.

அப்போது திடீரென்று தடுமாறியதோடு, வாகனத்தின் மேல்பகுதியில் நின்ற விஜய் வாகனத்தின் உள்ளே விழுந்தார். இதனை பார்த்து பதறிப்போன பவுன்சர்கள் உடனடியாக சுதாரித்து கொண்டு விஜய்யை பிடித்தனர்.

இந்த சம்பவத்தில் விஜய்க்கு காயம் எதுவும் ஏற்பட்டதா? என்பது பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. இதற்கிடையே தான் பிரசார வாகனத்தின் மேல் இருந்து வாகனத்தின் உள்ளே விஜய் தவறி விழுவதை அங்கிருந்தவர்கள் கேமரா மற்றும் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+