"வி" செண்ட்மெண்ட்.. விஜய், வெற்றி, விசில்.. தேர்தலில் தவெகவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்குமா?
சென்னை: நடிகர் விஜய்யின் தவெகவுக்கு பொதுச் சின்னமாக விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தவெக விசில் சின்னம் கேட்டதற்கு பின்னணியில் வி செண்டிமெண்ட் இருப்பதாக விவாதமாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் பெயரில் வி, கட்சியின் பெயரிலும் வி மற்றும் சின்னத்திலும் வி இருப்பதாக பேச்சுகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கான சின்னம் ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தவெக தரப்பில் 234 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு ஏதுவாக பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தது.

அதற்கேற்ப கட்சியின் கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் முறையாக தாக்கல் செய்தது. இதையடுத்து தவெக தரப்பில் கேட்கப்பட்ட விசில் சின்னத்தை பொதுச் சின்னமாக வழங்கி இருக்கிறது. ஏற்கனவே GOAT படத்தில் "விசில் போடு" என்ற பாடலை விஜய் பாடி இருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பையும் வெளியிட்டார்.
இதனால் விசில் சின்னத்தை விஜய் GOAT படத்திற்கு முன்பாகவே முடிவு செய்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த படத்திலேயே நடிகை திரிஷா ஒரு பாடலுக்கு தவெகவின் கட்சிக் கொடியான மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் சேலை கட்டி ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். இதனால் விஜய் அரசியலுக்கு வரும் முடிவை சில ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுத்துவிட்டதாக மீண்டும் பேச்சுகள் எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் விஜய் விசில் சின்னத்தை முடிவு செய்ததற்கு பின்னணியில் ஒரு செண்டிமெண்ட் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது விஜய்யின் பெயரில் இருக்கும் வி என்ற எழுத்து வருவது போல், கட்சியின் பெயரை தமிழக வெற்றிக் கழகம் என்று அறிவித்தார். தற்போது அதே வி எழுத்து வருவதை போல் விசில் சின்னத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அஜித் குமார் - சிறுத்தை சிவா கூட்டணி தான் வி செண்டிமெண்ட்-க்கு மிகவும் பிரபலமானவர்கள். ஆனால் அவர்களையே ஓரம்கட்டும் வகையில் விஜய்யின் வி செண்டிமெண்ட் இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் கடந்த சில மாதங்களாகவே விஜய் ஜோதிடத்தை நம்பி சில முடிவுகளை எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
தமிழக அரசியலில் விஜய்யின் புதிய 'ஃபார்முலா'.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் ஏன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்? -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
"எனக்கு சினிமாவில் ஒரே நண்பன் விஜய் தான்!"... அவர் மகன் பற்றி சொன்ன விஷயம்.. ராகவா லாரன்ஸ் ஓபன் -
கோவில்ல பிஸினஸ் நடக்குது.. விஜய் போட்ட பெரிய ஆர்டர்! யாரும் தப்ப முடியாது! இசஅ அமைச்சர் ரமேஷ் உறுதி! -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா












Click it and Unblock the Notifications