கரூர் ஃபேமிலி சந்திப்பு ஓவர்.. ஜனநாயகன் பட ப்ரோமோஷன் பணிகளை தொடங்கும் விஜய்.. தீவிர திட்டம்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய் தற்போது மீண்டும் திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார். 2026-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'ஜனநாயகன்' படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் முதல் பாடல் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது., 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைப்படம் வெளியாகும் வரை பல விளம்பர நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

கரூர் சம்பவம் விஜய்
சமீபத்தில் கரூரில் நடந்த சோக நிகழ்வு காரணமாக, 'ஜனநாயகன்' படத்தின் விளம்பரப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று மகாபலிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தனி சந்திப்பை நடத்தினார். கட்சி வட்டாரங்களின்படி, மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, ஊடகங்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
கரூர் இரங்கல் தெரிவித்த விஜய்
அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK), இந்தச் சந்திப்புக்காக ஒரு ரிசார்ட்டில் 50 அறைகளை முன்பதிவு செய்திருந்தது. இதன் மூலம் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 37 குடும்பங்கள் இந்தச் சந்திப்புக்காக அழைத்து வரப்பட்டிருந்தனர். விஜய், ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார். அவர்களுக்கு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனநாயகன் விஜய்
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு, விஜய் தற்போது 'ஜனநாயகன்' படத்தின் விளம்பரப் பணிகளை மீண்டும் தொடங்கத் தயாராகி வருகிறார். இத்தனை நாட்கள் கரூர் விவகாரம் காரணமாக ஜனநாயகன் பட ப்ரமோஷன் தொடங்காமல் இருந்தது. தற்போது அந்த பணிகள் தொடங்க உள்ளன.
இத்திரைப்படம் அவரது நடிப்பு வாழ்க்கையிலும், அரசியல் பயணத்திலும் ஒரு முக்கியமான திட்டமாகக் கருதப்படுகிறது. அவரின் கடைசி படம் என்று ஜனநாயகன் திரைப்படம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
'ஜனநாயகன்' படக்குழு, நவம்பர் மாத தொடக்கத்தில் முதல் பாடலை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், வலுவான ப்ரோமோஷன் பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பிறகு, டீசர் மற்றும் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி, அவரது ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
விஜய்க்கு பறக்கும் கோரிக்கை
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய் மீண்டும் வர வேண்டும். சினிமாவில் நடிக்க வேண்டும். சினிமாவிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும்.. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது..முடிவை மாற்றிக்கொள்ளுங்கள் விஜய்.. என்று அவரின் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அரசியல் இருக்கட்டும்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் துணை முதல்வர் ஆன பின்பும் கூட சினிமாவில் நடிக்கிறார். அடுத்த படத்தில் கூட அவர் சைன் செய்துள்ளார்.
அதிலும் பவன் கல்யாண் நடிக்கும் அடுத்த படம் 2 பாகங்களாக வருகிறது. விஜய் அப்படி நடிக்க வேண்டும். அதுவே தமிழ் சினிமாவிற்கு நல்லது. விஜய் முடிவால் தமிழ் திரையுலகிற்கு பெரிய சிக்கலாகிவிட்டது.. இதனால் தனது முடிவை விஜய் மாற்றிக்கொள்ள வேண்டும்.. அவர் ரிட்டையர் ஆக கூடாது என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
50+ வீடியோ.. சேலம் மணிகண்டன்.. சிபிஎம், டிடிவி தினகரன் விஜய்க்கு வைத்த கோரிக்கை -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடுத்த 3 நாட்களில் ரூ.3,000 வரும்.. வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்! விஜய்யின் மெகா திட்டம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்!












Click it and Unblock the Notifications