Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் மாதிரி விஜய் எடுத்த ஒரு முடிவு.. தேர்தல் களமே அடியோடு மாறுது பாருங்க.. 4 முனை போட்டி உறுதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் நான்கு முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. அடுத்தடுத்து நடந்த பல அரசியல் திருப்பங்கள் காரணமாக, தமிழ்நாட்டில் போட்டி தீவிரம் அடையும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

முதல் அணியாக, திமுக, காங்கிரஸ் மற்றும் சில கூட்டணிக் கட்சிகள் அடங்கிய தற்போதைய கூட்டணி உள்ளது. இந்த அணி ஒருமித்த சக்தியாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறது. இது வெற்றிக்கூட்டணி. வரிசையாக 2 லோக்சபா தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்களை இந்த கட்சி வென்றுள்ளது. நிர்வாகச் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை முன்னிறுத்தி, எதிரணிகளை விமர்சிப்பதன் மூலம் தனது வலிமையை உறுதிப்படுத்த முயல்கிறது.

TVK Vijay to go without alliance Tamil Nadu Braces for Four-Front Political Battle Ahead of Elections

நாம் தமிழர் தனியாக நிற்கும்

நாம் தமிழர் கட்சி இரண்டாவது அணியாக களத்தில் உள்ளது. தனித்துப் போட்டியிடும் இக்கட்சி, தமிழ் அடையாளம், மொழி, உரிமைகளுக்காகப் பேசும் வலுவான மாற்றாக தன்னை முன்வைக்கிறது. பெரிய கூட்டணி இல்லாமல் இருந்தாலும், அதன் வலுவான பேச்சுகள் மற்றும் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்கும் அரசியல் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது அணியாக உள்ளது. உட்கட்சி சவால்கள் மற்றும் பாஜக தலைமை மாற்றங்களுக்குப் பிறகு, தங்கள் செல்வாக்கை மீண்டும் நிலைநிறுத்த இந்த அணி முயற்சிக்கிறது. நிறைய மோதல்கள், உட்கட்சி வருத்தங்கள் இருந்தாலும் கூட்டணி வலிமையாக உள்ளது. தேசிய அளவிலான தொடர்புகளையும், அமைப்புக் கட்டமைப்பையும் நம்பி, அரசியல் களத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க முனைப்புக் காட்டுகிறது.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம்

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) நான்காவது அணியாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையக் கூடாது என்ற உறுதியான முடிவை இக்கட்சி எடுத்துள்ளது. செங்கோட்டையன், நாளைய தினம் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி சேர்வதை செங்கோட்டையன் கடுமையாக எதிர்ப்பார்.

எடப்பாடி பழனிசாமி உடனான செங்கோட்டையனின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளும், அரசியல் வரலாறும் அத்தகைய கூட்டணியை ஏற்க மறுப்பதற்கு முக்கியக் காரணங்களாக அமைகின்றன. இதனால், தமிழக வெற்றி கழகத்தின் முடிவுகளில் செங்கோட்டையன் செல்வாக்கு செலுத்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்வதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையனுக்கு கட்சியில் அதிக பவர் இருக்கும் என்பதால்.. அவர் அதிமுக கூட்டணி உருவாகாமல் பார்த்துக்கொள்வார். அதாவது அதிமுக - தவெக கூட்டணி உருவாகி அது வென்றால், அது எடப்பாடிக்குத்தான் சாதகம். அதை செங்கோட்டையன் விரும்ப மாட்டார். எனவே இந்த கூட்டணிக்கு தவெக உள்ளே இருந்தே செங்கோட்டையன் முட்டுக்கட்டை போடுவார்.

நான்கு முனை போட்டி

தமிழகத்தின் அரசியல் சூழல் இதனால் மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. நான்கு வலுவான அணிகள் போட்டியிடுவதால், வரவிருக்கும் தேர்தல் கடும் போட்டி நிறைந்ததாகவும், கணிக்க முடியாததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் வாக்குகள் கடுமையாக சிதறும். வெற்றிபெறுபவர் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெல்வார். வாக்காளர்களுக்குப் பல தேர்வுகள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் மக்களுடன் எவ்வாறு இணைகிறது என்பதையும், முக்கியப் பிரச்சனைகளை எவ்வாறு அணுகுகிறது என்பதையும் பொறுத்தே இறுதி முடிவு அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+