விஜய் டிக் அடித்த பெயர்கள்.. 80 பேருக்கு லக்.. முதல் கட்ட வேட்பாளர்கள் லிஸ்ட் ரெடி.. அதே ஜெ. ஸ்டைல்
சென்னை: தவெக கூடாரத்தில் தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தலில் களம் காணத் துடிக்கும் நிர்வாகிகள், இளைஞர்களின் 'விருப்ப மனு' வேட்டை பிப்ரவரி 6-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்த நிலையில் விஜய் இதில் 80 பேரை ஏற்கனவே டிக் செய்து உள்ளாராம்.
தலைசுற்ற வைக்கும் கூட்டம்!
விருப்ப மனு விநியோகம் தொடங்கிய ஒரே மணி நேரத்தில், சுமார் 10,000 பேர் போட்டிப்போட்டுக் கொண்டு மனுக்களை அள்ளியிருக்கிறார்கள். இதுவரை மொத்தம் 50,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் 'கிலி'யுடன் கிசுகிசுக்கின்றன. பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பிக்கொடுத்தவர்கள் என்னவோ சிலர்தான். 1000 க்கும் குறைவான நபர்களே மனுக்களை நிரப்பு டிடி எடுத்து கொடுத்துள்ளனர்.

மனுவை கொடுக்கவில்லை
பல ஆயிரம் பேர் இந்த விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தைச் சமர்ப்பிக்கும் போது, ஒரு குறிப்பிட்ட தொகையை (சுமார் ₹10,000 முதல் ₹50,000 வரை தொகுதிக்கு ஏற்ப இருக்கலாம் எனக் கூறப்படுகிறது) வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், வேட்பாளர் விருப்ப மனுத் தாக்கலில் நிலவும் மந்தநிலை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது விண்ணப்பங்களை வாங்கியவர்கள் அதை திரும்பி கொடுக்கவில்லை. அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் 1000-க்கும் குறைவான விண்ணப்பங்களே வந்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது, ஒரு தொகுதிக்கு சராசரியாக 2 பேர் கூட இன்னும் விண்ணப்பிக்காத சூழல் நிலவுகிறது.
நிர்வாகிகளுக்கு விழுந்த 'அசைன்மென்ட்'!
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வேட்பாளர்கள் தேர்வை எப்படிக் கையாள்வது? என்ற குழப்பம் தவெக தலைவர் விஜய்க்கு உள்ளதாம். வேட்பாளர்களைத் தேர்வு செய்வது என்பது சாதாரண விஷயமல்ல. இது தொடர்பாக எம்.எல்.ஏ-க்களுடன் வீடியோ காலில் உரையாடிய பொதுச்செயலாளர் ஆனந்த்,
"இத்தனை பேரை நேர்காணல் செய்து வேட்பாளரை அறிவிப்பது என்பது பெரிய சவால். அதனால், அந்தந்தத் தொகுதிக்கு 2 அல்லது 3 பேரை.. நீங்கள் பரிந்துரை செய்யுங்கள்.. அவர்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்" என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ-க்களும் தங்களுக்கு நெருக்கமானவர்களின் பட்டியலைத் தலைமையிடம் ஒப்படைத்துள்ளனர்.
திடீர் திருப்பம்: 80 பேர் லிஸ்ட் தயார்!
நேர்காணல் நடத்தித்தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் நம்பிக்கொண்டிருக்க, திடீரென ஒரு செய்தி தீயாகப் பரவி வருகிறது. அதாவது, "விஜய் ஏற்கனவே 80 வேட்பாளர்களின் பட்டியலை ரகசியமாக இறுதி செய்துவிட்டார்" என்பதுதான் அந்த ஹாட் நியூஸ். ஜெயலலிதா பாணியில் இந்த லிஸ்டை விஜய் இறுதி செய்துவிட்டாராம், அதன்படி சாதி ரீதியாக 30 பேர், வேற்று கட்சியில் பல்வேறு கிளை செயலாளர் பதவிகளில் இருந்து தவெக வந்தவர்கள் என்று பலரை விஜய் டிக் செய்து உள்ளாராம்.
பிப்ரவரி 28: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலைத் தலைவர் விஜயே நேரடியாக அறிவிக்கப் போகிறாராம்.
மார்ச் இரண்டாம் வாரம்: மொத்தமுள்ள 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்றி, பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தித் தமிழகத்தையே அதிர வைக்கத் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர












Click it and Unblock the Notifications