Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

TVK Vijay: வேலூரில் விஜய் நடத்தும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி.. டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள சூழலில், இந்தக் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை மாலை 6 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஒருவேளை டாஸ்மாக் கடையில் தவெகவினர் குவிந்தால், தேவையின்றி பிரச்சனைகள் உருவாகும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். பிப்ரவரி 13ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை விஜய் நடத்தினார். இந்த சந்திப்பின் போது வடமாநில தொழிலாளி சூரஜ் என்பவர் உயிரிழந்தார். இதற்கு சேலம் மாவட்டத்தில் அடித்த வெயில் காரணமாக பார்க்கப்பட்டது.

TVK Vijay

இதனால் நாளை வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நடக்கவுள்ள தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் 4,900 பேருக்கு மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அக்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மதியம் 12 முதல் 3 மணி வரை நடக்கும் என்றும் தெரிகிறது.

காவல்துறையினரின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட தவெகவினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமியர், பள்ளி மாணவ, மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

விஜய்யின் பிரச்சார வாகனத்தை யாரும் பின் தொடர்ந்திட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் தவெகவினருக்கான குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளது. க்யூ ஆர் குறியீடு அட்டை இல்லாதவர்கள் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாளை விஜய் வேலூர் மாவட்டம் வரவிருக்கும் சூழலில், மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடக்கவிருக்கும் பகுதி அருகே இருக்கும் டாஸ்மாக் கடையை நாளை மாலை 6 மணி வரை மூட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+