எந்த மாவட்டங்களில் சறுக்கும் தவெக? லீடிங்கில் பின்தங்கும் பகுதிகளின் முழுப் பட்டியல்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்றுள்ளது. 234 தொகுதிகளில் 111 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. சில மண்டலங்களில் கட்சி அதிரடியான முன்னிலை பெற்று ஆச்சரியம் அளித்துள்ளது. எந்த மண்டலத்தில் தவெக பலவீனமாக உள்ளது. எந்த பகுதிகளில் எல்லாம் குறைவான லீடிங்கில் உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், 85.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களம் கண்டுள்ளன. எக்ஸிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும், 234 தொகுதிகளில் 111 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது.

மாஸ் காட்டிய விஜய்
குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தவெக மிகப்பெரிய பலத்தை காட்டியுள்ளது. சென்னை (16ல் 14), திருவள்ளூர் (10ல் 9), செங்கல்பட்டு (7ல் 5), காஞ்சிபுரம் (4ல் 3) போன்ற பகுதிகளில் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதேபோல் மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும் நல்ல முன்னிலை காணப்படுகிறது. திருச்சி (9ல் 7), மதுரை (10ல் 8), திருநெல்வேலி (5ல் 4), சிவகங்கை (4ல் 3), விருதுநகர் (7ல் 4) போன்ற இடங்களில் தவெக வலுவான நிலையைப் பதிவு செய்துள்ளது.
மேற்கு தமிழகத்தில் உள்ள கோவை (10ல் 6), திருப்பூர் (8ல் 5), ஈரோடு (8ல் 4), சேலம் (11ல் 5), நாமக்கல் (6ல் 3) ஆகிய பகுதிகளிலும் கட்சி கணிசமான முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் இதற்கு மாறாக, சில மாவட்டங்களில் தவெக மிகவும் பின்தங்கியுள்ளது.
லீடிங் குறைவாக உள்ள பகுதிகள் லிஸ்ட்
விழுப்புரம் (7ல் 0), அரியலூர் (2ல் 0), தருமபுரி (4ல் 0), நீலகிரி (3ல் 0), தென்காசி (5ல் 0), திருவாரூர் (4ல் 0), மயிலாடுதுறை (3ல் 0) போன்ற இடங்களில் கட்சி இதுவரை முன்னிலை பெறவில்லை. அதேபோல் தஞ்சாவூர் (8ல் 1), கடலூர் (9ல் 1), கன்னியாகுமரி (6ல் 1), திண்டுக்கல் (7ல் 1) போன்ற பகுதிகளில் மிகக் குறைந்த முன்னிலை மட்டுமே உள்ளது. இந்நிலையில், இறுதி முடிவுகள் வெளியாகும் வரை இந்த நிலைமை எவ்வாறு மாறும் என்பது அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications