மாட்டிக்கிட்ட பங்கு! மயில் தோகை மாலை..விஜய்க்கு மிக பெரும் சிக்கல்! ஜெயிலுக்கு போகக் கூட வாய்ப்பு?
சென்னை: ஏற்கனவே சிபிஐ உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளின் வளையத்தில் சிக்கி இருக்கும் விஜய். தற்போது வனத்துறை வசம் சிக்கி இருக்கிறார். வேலூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய்க்கு மயில் தோகை மாலை அணிவிக்கப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 மயில் தோகைகளை வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டாலும் அதை பயன்படுத்தி மாலைகள் தயாரிப்பது விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளன. தமிழகத்தில் தற்போதைய சூழலில் நான்கு முறை போட்டி நிலவுகிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி உறுதியாகி இருக்கிறது. இதனையடுத்து, தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

தவெக விஜய்
இந்த நிலையில் தமிழக அரசியல் வரலாற்றின் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஆன விஜய் கலந்து கொண்டு பேசினார்.
வேலூர் விஜய் சந்திப்பு
இதில் உரையாற்றிய விஜய்," மக்களை நேசிக்கும் தலைமை இல்லாததால் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துள்ளனர். ஏமாற்றத்தை முறியடிக்க வெகு ஜன மக்கள் இயக்கமாக வந்ததுதான் தவெக. நான் சொன்ன ஜல்லிக்கட்டு காளை கதை புரிய வேண்டியவர்களுக்கு புரியும். த.வெ.க ஆட்சி அமைந்த பிறகு ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வந்து மக்களை சந்திப்பேன். என்னை அசிங்கமாகப் பேசினால், அது மக்களைப் பேசியது போன்றது; நானும் மக்களும் ஒன்று. விஜயும் மக்களும் ரத்தமும் சதையும், உடலும் உயிரும் மாதிரி; அதை பிரிக்கவே முடியாது.
தமிழக தேர்தல் 2026
தற்போது நடைபெறும் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக நடக்கும் போர். விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்தான் இந்த தேர்தல்; இதுக்கு நடுவில் NDA, டெல்லி என எதுவும் இல்லை. இது ஒரு அதிசய தேர்தல்; இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எல்லாரும் சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கிறார்கள். இந்த விஜய் ஊழலை எதிர்ப்பதால், மக்களோடு மக்களாக இருப்பதால் அவர்களுக்கு ஆதங்கம்; அதனால் நம்மை எதிர்க்கிறார்கள்.
தமிழக அரசியல்
தமிழ்நாடு இப்போது சூப்பர் ஸ்டாண்ட் அப் காமெடி மாநிலமாக மாறியுள்ளது. அனைத்து கட்சிகளும் சேர்ந்து என்னை எதிர்க்கின்றன. அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தவெக, திமுக இடையில் மட்டும் தான் தேர்தலில் போட்டி. சீரியஸாக போட்டி நடக்கும்போது காமெடிக்கு இங்கே இடமில்லை. கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழியைப் போட்டீர்கள்? மனசாட்சி வேண்டாமா சி.எம். சார்?,. நாங்கள் எல்லோரும் உங்கள் நண்பர்கள் எனில் ஏன் எங்கள் கூட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுக்கிறீர்கள்?
விஜய் வாக்குச்சாவடி
என் மீது அவதூறு பரப்புவது, மக்கள் மீது அவதூறு பரப்புவதற்கு சமம். விஜய்யும் மக்களும் வேறு வேறு அல்ல, இந்த விஜய்யும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி. எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். இப்போ நான் சென்னைக்கு 4 மணி நேரம் டிராவல் பண்ணி போகணும். தயவுசெஞ்சு என் வண்டி பின்னாடியோ சைடுலயோ யாரும் பைக்ல வராதீங்க. நான் உங்கள கெஞ்சி கேட்டுக்கிறேன். நமக்கு ஆதரவா ஒரு கோஷத்தை எழுப்பியிருக்காங்க. எங்க வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடியாம். அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா. எங்க வாக்குச்சாவடி விஜய் வாக்குச்சாவடின்னு அர்த்தம்" என்றார்.
வீரவாள் பரிசு
தொடர்ந்து உரையை முடித்த விஜய்க்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வீரவாள், வெள்ளி யானை சின்னம், வேல் உள்ளிட்டவற்றை வழங்கினர். குறிப்பாக மயில் தோகை மாலை அணிவித்து விஜய்க்கு வீரவால் பரிசளிக்கப்பட்டது. இதில் தான் விஜய்க்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விஜய்க்கு மயில் தோகை மாலை அணிவிக்கப்பட்டது சட்டப்படி குற்றம் என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள். வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972இன் கீழ் மயில் தோகைகளை வைத்திருப்பது அனுமதிக்கப்படுகிறது.
மயில் தோகை மாலை சர்ச்சை
காரணம் மயில் தோகைகள் அவ்வப்போது உதிர்வது வழக்கம். மேலும் இயற்கையாக மரணமடையும் மயில்களின் தோகைகளை எடுத்து நாம் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை வணிக ரீதியாக விற்பனை செய்வது மற்றும் அதனை பயன்படுத்தி மாலைகள் போன்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மயில் தோகைகள் மூலம் திருஷ்டி நீக்குவது அல்லது கலாச்சார சமய நோக்கங்களுக்காக இயற்கையாக உதிர்ந்த மயில் தொகைகளை வைத்திருக்கலாம்.
1972 வனவிலங்கு சட்டம்
அதிக அளவில் மயில் தோகை மாலைகள் விற்பனை செய்வது சட்ட விரோதமானது. பலர் இயற்கையாக உதிர்ந்த இறகுகள் எனக்கூறி சட்ட விரோதமாக மயில்களை வேட்டையாடி பயன்படுத்தும் அபாயம் இருப்பதால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று விஜய்க்கு மயில் தோகை மாலை அணிவிக்கப்பட்டது சட்டப்படி குற்றம் எனவும், வனத்துறை விஜய் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் உள்ளது என்கின்றனர் வனவிலங்கு ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications