புதுச்சேரியில் விசில் சின்னம் கிடைத்தவுடன் விஜய் அதிரடி முடிவு.. வெளியான நிர்வாக குழு பட்டியல்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. புதுச்சேரி அரசியல் களமும் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டை போல புதுச்சேரியிலும் தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி தவெக வுக்கு 30 பேர் கொண்ட நிர்வாக குழுவை நியமனம் செய்துள்ளார் (TVK VijayTVK Vijay).
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத் தோழர்களுக்கு வணக்கம். பணிகளையும் புதுச்சேரி மாநிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, அம்மாநிலத்திற்கென புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது. இந்தக் குழு பற்றிய விவரம் வருமாறு.

புதுச்சேரி தவெக நிர்வாக குழு
A. சையத் முகமது காசிம், K.புதியவன், V.சாமிநாதன் Ex. MLA, K.A.U.அசனா Ex. MLA, I.பெரியசாமி Ex.MLA, VJ.சந்திரன் Rtd., IG, AG.வலந்தன், R. நிரேஷ் குமார், U. ராமு, N.மணிபாலன், V.பிரதீபன், S.பிரபு, S.ராஜசேகர், N.சந்திரசேகரன், M.K.சத்யா, K.செந்தில் குமார், N.வசந்தராஜா, M.சரவணன், A.சந்திரபாலன், B.யூசப். P.வேல்முருகன், A.விஜி, T.சுகுமார், திரு. K.பாரதிதாசன், திரு. S.பிரான்சிஸ், J.கிளார் பேட்ரிக், M.மணிகண்டன், G.குமரவேல், B.பாலாசுதாகர், M.பிரிஜேஷ் ஆகியோர் புதுச்சேரி நிர்வாக குழுவினராக நியமிக்கப்படுகிறார்கள்.
புதிய நிர்வாகக் குழு
எனது உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி, பொதுச் செயலாளருடன் இணைந்து, இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் உங்களுடன் இன்னொரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நல்லதே நடக்கும்
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நமது தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தேர்தல் ஆணையம் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்தை ஒதுக்கியிருப்பதை அனைவரும் அறிவீர்கள். தற்போது புதுச்சேரி மாநிலத்திற்கும் அதே விசில் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் நமக்கு ஒதுக்கியிருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்" என்று கூறியுள்ளார்.
-
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications