வைத்திலிங்கம் வந்தால்.. விஜய் போடும் லாபக் கணக்கு.. அதிமுக மாஜிகளை குறி வைக்கும் தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வந்தால், தவெக தலைவர் விஜய் சில லாபக் கணக்குகளை போட்டு வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள 5 மண்டலங்களுக்கும் வலிமையான முகமாக 5 நிர்வாகிகளை நியமிக்கும் திட்டத்தில் விஜய் இருப்பதாகவும், அதற்கான பணிகளை செங்கோட்டையன் மூலம் செய்ய அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். தவெகவில் இணைந்த அவருக்கு தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கு மாவட்டங்களுக்கான பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலமாக கொங்கு மண்டலத்தில் தவெகவின் முகமாக செங்கோட்டையன் மாறி இருக்கிறார்.

TVK Vijay

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக வைத்திலிங்கம் தவெகவில் இணையப் போவதாக கூறப்பட்டது. ஓபிஎஸ் முகாமில் உள்ள வைத்திலிங்கம் ஒரத்தநாடு எம்எல்ஏ-வாக இருந்து வருகிறார். இந்த சட்டசபைத் தேர்தலிலும் கட்டாயம் போட்டியிடும் எண்ணத்தில் வைத்திலிங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் என்டிஏ கூட்டணியில் இருந்த போதே வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தது.

இதனால் வைத்திலிங்கம் வருத்தத்தில் இருந்தார். இதன் காரணமாகவே ஓபிஎஸ் முகாமில் இருந்து விலகும் முடிவுக்கு வைத்திலிங்கம் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை வைத்திலிங்கம் தவெகவில் இணைவது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனிடையே அதிமுகவில் இருந்து மாஜி அமைச்சர்கள் வந்தால், விஜய் தரப்பு சில லாபக் கணக்குகளை போட்டு வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதாவது தமிழ்நாட்டின் 5 மண்டலங்களிலும் ஒரு முக்கிய தலைவரை நியமிக்க விஜய் முடிவு செய்திருக்கிறார். எப்படி கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் இருக்கிறாரோ, அதேபோல் டெல்டா, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளிலும் மாஜி அமைச்சர்களை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்.

இதன் மூலமாக தவெகவின் கட்டமைப்பையும் வலுப்படுத்த முடியும் என்று விஜய் தரப்பு நம்பிக்கை வைத்திருக்கிறது. அதேபோல் விஜய்யை தவிர்த்து தவெகவை வெளிச்சத்தில் வைத்து கொள்வதற்கு இந்த தலைவர்கள் சரியாக இருப்பார்கள் என்றும் கணக்கு போட்டிருக்கின்றனர். இதனால் விஜய்யின் லாபக் கணக்கு தவெகவுக்கு லாபமாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+