அணுக முடியாத இடத்தில் விஜய்.. தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்கள் செய்யும் அரசியல்.. என்ன நடக்கிறது?
சென்னை: தவெக தலைவர் விஜய்யை சுற்றில் இருப்பவர்கள் தனியாக ஒரு அரசியலை மேற்கொண்டு வருவதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். விஜய்யை யாரும் அணுக முடியாத அளவிற்கு கொண்டு சென்றுவிட்டதாகவும், புதிதாக வருவோர் தங்களின் இடத்திற்கு வந்துவிடக் கூடாது என்பதால், யாரையும் கட்சியில் சேர்க்கவும் முயற்சிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் யாரும் வருத்தமோ, மன்னிப்போ இதுவரை கேட்கவில்லை. 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்யும், சிஎம் சார்.. பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்..

நான் வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில் இருப்பேன்.. ஆனால் அவர்கள் மீது கை வைக்காதீர்கள்.. கரூர் மக்களை விரைவில் சென்று சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார். விஜய்யின் பேச்சில் கொஞ்சம் கூட பொறுப்போற்றுக் கொண்டதை போல் இல்லை என்றும், மீண்டும் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதற்கேற்ப தவெக நிர்வாகிகளும் கரூர் மாவட்டம் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் எண்ணத்தில் கூட இல்லை என்று கூறப்படுகிறது. புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் வழக்கு தொடர்பான ஆலோசனையில் இருப்பதாகவும், ஆதவ் அர்ஜுனா சோசியல் மீடியா மூலமாக தவெகவினரை கையாண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் விஜய் தவெகவின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியின் பேச்சை மட்டுமே கேட்பதாக கூறப்படுகிறது. தவெகவின் 2ஆம் கட்டத் தலைவர்களான அருண் ராஜ், ராஜ் மோகன் உள்ளிட்டோர் என்ன ஆனார்கள் என்பதே அக்கட்சியினருக்கு கூட தெரியவில்லை. விஜய்யின் இரங்கல் பதிவுகளையும், வீடியோக்களையும் மட்டுமே தங்கள் எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே விஜய்யை சுற்றி இருப்பவர்கள் தனியாக அரசியல் செய்து வருவதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. மற்ற கட்சிகளின் நிர்வாகிகள் யாரும் அணுகும் இடத்தில் விஜய் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவின் செய்தி தொடர்பாளராகவும், ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகியுமான மருது அழகுராஜ் தவெகவில் இணையவே விரும்பி இருந்தார்.
விஜய் தொடர்பாக பல்வேறு நேர்காணல்களிலும் புகழ்ந்து வந்தார். ஆனால் திடீரென திமுகவில் ஐக்கியமானார். இதன் பின்னணி தொடர்பாக விசாரிக்கையில் தவெக தலைவர் விஜய்யை அணுக முடியவில்லை என்றும், விஜய்யை சுற்றில் இருப்பவர்கள் புதிதாக யாரையும் அவருக்கு அருகில் விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்து அரசியல் செய்து வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
விஜய் அரசுக்கு முதல் அக்னிப்பரீட்சை.. நெருப்பிற்குள் நுழையும் மோதல்.. 5 தொகுதிகளில் என்ன நடக்கும்? -
பெண்களின் பாதுகாப்பிற்கு புதிய அரண்.. ஜூன் 9ல் சிங்கப்பெண் அதிரடி படையை களமிறக்கும் முதல்வர் விஜய்! -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி! -
தவெக ஆட்சியில்.. ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா? வன்னி அரசு விளக்கம்! -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா












Click it and Unblock the Notifications