ஆதாரத்தை திரட்டும் அஸ்ரா கார்க்.. விஜய்க்கு சிக்கல் மேல் சிக்கல்.. இதை யோசித்து இருக்கவே மாட்டார்
சென்னை: கரூர் விவகாரம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் ஐபிஎஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது.
கரூரில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட மொத்தம் 41 பேர் பலியாகினர். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த சிறப்பு புலனாய்வு விசாரணை குழுவின் தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரியும், ஐஜியுமான அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தமிழ்நாடு வடக்கு மண்டலத்தின் ஐஜியாக செயல்பட்டு வருகிறார். இந்த மண்டலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கும்.
ஆதாரங்களை திரட்டும் அஸ்ரா கார்க்
அஸ்ரா கார்க் தற்போது தீவிரமாக ஆதாரங்களை திரட்டி வருகிறார். இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இரண்டு எஸ்பிக்கள், ஒரு ஏடிஎஸ்பி, இரண்டு டிஎஸ்பி, ஐந்து இன்ஸ்பெக்டர்களும் உள்ளனர். இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது.
1. அங்கே உள்ளே மக்களிடம் விசாரணை குழு முக்கிய வாக்குமூலங்களை பெற்றுள்ளன.
2. பாதிக்கப்பட்ட மக்களிடமும் அவர்களின் குடும்பங்களிடமும் ஆதாரங்களை பெற்றுள்ளனர்.
3. விஜய் தாமதமாக வந்தது, நீர் கூட கொடுக்காதது, முறையாக ஏற்பாடுகளை செய்யாதது உள்ளிட்ட ஆதாரங்களை இந்த SIT திரட்டி வருகிறது.
4. அதேபோல் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் போலீஸ் அறிவுரையை ஏற்க மறுத்தது. போலீசார் கொடுத்த திட்டங்களை ஏற்க மறுத்தது, முன்கூட்டியே வாகனத்தை நிறுத்த சொல்லியும் ஏற்க மறுத்தது உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் ஆதாரங்களாக திரட்டி வருகிறார்கள்.
5. கரூர் நிகழ்விற்கு பின் வதந்தி பரப்பியது, நிறைய கான்ஸ்பிரசி தியரியை பரப்பியது உள்ளிட்ட விஷயங்களையும் இந்த குழு விசாரித்து வருகிறது.
இந்த SIT அறிக்கை விஜய்க்கு பெரிய சிக்கல் ஆகும். விஜய்க்கு எதிராக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இவர் திரட்டும் ஆதாரங்கள் விஜய்க்கு எதிராகவும் அவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகவும் திரும்பலாம் என்று கூறப்படுகிறது.
கோர்ட் விஜய் கண்டிப்பு
ஏற்கனவே கோர்ட் விஜயை கண்டித்துள்ளது. கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமை பண்பே இல்லை. விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. விஜய் தொண்டர்கள் ரசிகர்கள் மக்களை கைவிட்டு பொறுப்பற்ற முறையில் வெளியேறியுள்ளார் அதேபோல் விஜய் பிரச்சார ஏற்பாட்டாளர்கள் மீது கருணை காட்டாதீர்கள். வழக்கு பதிவு செய்க,. நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழக அரசு ஆதவ் அர்ஜூனா டெலிட் செய்யப்பட்ட போஸ்டை காட்டிய நிலையில் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா போட்ட பதிவு குறித்து விசாரிக்க வேண்டும். அதன் பின்புலத்தை விசாரிக்க வேண்டும். எதன் அடிப்படையில் போஸ்ட் செய்யப்பட்டது. இவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், எனவே இந்த சம்பவத்தில் அரசு அமைதியாக இருக்கக்கூடாது, என்று கோர்ட் கூறி உள்ள நிலையில் எஸ்.ஐ.டி அறிக்கையும் விஜய்க்கு எதிராக வர வாய்ப்புகள் உள்ளன.
-
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
விஜய்யை ஒருமையில் பேசிய சீமானுக்கு சிக்கல்? சென்னை போலீஸ் கமிஷனரிடம் தவெக வழக்கறிஞர் புகார் -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!











Click it and Unblock the Notifications