Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் 'ஆட்ட நாயகன்' ஆக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக), ANS நிறுவனத்தின் தற்போதைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் துல்லியமாகக் கணித்த அதே ANS நிறுவனம், தற்போது வெளியிட்டுள்ள 9.7% வாக்கு வங்கி என்பது, அரசியல் விமர்சகர்கள் மட்டுமன்றி தவெக தொண்டர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

TVK Vijay

இரட்டை இலக்கத்தைத் தொடாத 'மேஜிக்'!

சினிமாவில் ஓப்பனிங் கலெக்ஷனில் சாதனைகளை முறியடிக்கும் விஜய், அரசியலில் தனது முதல் 'பாக்ஸ் ஆபீஸ்' சோதனையில் தடுமாறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எதிர்பார்ப்பு: குறைந்தபட்சம் 15% முதல் 20% வரை வாக்கு வங்கியைப் பிடித்து, தமிழக அரசியலில் ஒரு 'மூன்றாவது துருவமாக' உருவெடுப்பார் என அவரது ரசிகர்கள் மலைபோல் நம்பியிருந்தனர். இன்னும் சிலர் அவர் தனித்து ஆட்சி அமைப்பார் கிங் ஆவார்.. அல்லது கிங் மேக்கராவது ஆவார் என்று எதிர்பார்த்தனர்.

யதார்த்தம்: ஆனால், தற்போதைய கணிப்பு 10 சதவீதத்திற்கும் குறைவாக (9.7%) இருப்பது, தவெக-வின் அரசியல் பயணத்தில் ஒரு பெரிய முட்டுக்கட்டையாகப் பார்க்கப்படுகிறது.

கருத்து கணிப்பு முடிவுக்கு

இந்தக் கருத்துக் கணிப்பில் ஆச்சரியமான விஷயம், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெற்றுள்ள 9.7% வாக்குகள். முதல் தேர்தலிலேயே இரட்டை இலக்கத்தை நெருங்கும் இந்த சதவிகிதம், வரும் நாட்களில் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு சதவிகிதம்: யாருக்கு எவ்வளவு?

இந்த சர்வே முடிவுகளின்படி, ஆளுங்கட்சியான திமுக தனது செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளது.

திமுக கூட்டணி: 44.9% வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.

அதிமுக + NDA கூட்டணி: 38.5%வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக): 9.7% வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.

நாம் தமிழர் கட்சி (நாதக): 4.8% வாக்குகளை பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.

மற்றவை: 2.1% பெறும் என்று ANS நிறுவனம் கருத்து கணிப்பில் கூறி உள்ளது.

பிப்ரவரி 7 முதல் மார்ச் 12 வரையிலான காலகட்டத்தில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான ஆய்வின் முடிவுகள் இது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏன் இந்தச் சரிவு? - ஒரு குட்டி அனாலிசிஸ்

விஜய்யின் அரசியல் வருகை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், கள யதார்த்தம் வேறாக இருக்கிறது என்பதை இந்த 9.7% உணர்த்துகிறது.

கூட்டணி குழப்பங்கள்: திமுக, அதிமுக போன்ற பலமான கூட்டணிகள் இருக்கும் நிலையில், தனித்துப் போட்டி என்பது அவருக்கு எதிராக மாறி உள்ளது.

கட்டமைப்பு சவால்கள்: மாவட்ட வாரியாக பலமான கிளைக் கழகங்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் (Booth Agents) நியமிப்பதில் தவெக இன்னும் முழுமை பெறவில்லை என்பது ஒரு பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

நடுநிலை வாக்காளர்களின் மௌனம்: வெறும் 'யங்ஸ்டர்ஸ்' மற்றும் ரசிகர்களை மட்டுமே நம்பி அரசியல் செய்ய முடியுமா? குடும்பத் தலைவிகள் மற்றும் நடுநிலை வாக்காளர்களை ஈர்க்கும் வகையிலான 'பாலிசி'கள் விஜயிடம் இருந்து இன்னும் மக்களிடம் ஆழமாகச் சென்றடையவில்லை.

அதிமுக - திமுகவுக்கு லாபமா?

விஜய் 10 சதவீதத்திற்கும் கீழே சுருங்குவது, நேரடியாக திராவிடக் கட்சிகளுக்கே சாதகமாக முடிகிறது. 44.9% வாக்கு வங்கி வைத்திருக்கும் திமுக-வுக்கும், 38.5% வைத்திருக்கும் அதிமுக-வுக்கும் இடையே பெரிய இடைவெளி உருவாக, தவெக போன்ற கட்சிகள் வாக்குகளைச் சிதறடிக்கத் தவறுவதே காரணமாகிறது.

மீண்டெழுவாரா விஜய்?

9.7% என்பது ஒரு ஆரம்பம்தான் என்றாலும், இது விஜய்க்கு ஒரு 'வேக்-அப் கால்' (Wake-up call). இந்தச் சிறிய சறுக்கலைச் சரிசெய்து, இன்னும் அதிரடியான அறிவிப்புகளுடனும், ஆழமான அரசியல் கொள்கைகளுடனும் களமிறங்கினால் மட்டுமே 2026-ல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். விஜயின் அரசியல் திரைக்கதையில் அடுத்த 'ட்விஸ்ட்' என்ன? பொறுத்திருந்து பார்ப்போம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+