விஜய் செய்த தவறுகள்.. பிரபல சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் வெளியிட்ட பதிவு
சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக மூன்றாவது நாளில் விளக்கம் அளித்த விஜய் மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்... கரூரை சேர்ந்த மக்கள் அந்த உண்மைகள் எல்லாம் சொல்லும் போது, எனக்கு கடவுளே நேரில் இறங்கி வந்து சொன்னது மாதிரி இருந்தது என்று கூறினார். இந்நிலையில் விஜய் செய்த தவறுகள் தொடர்பாக பிரபல சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் செய்த தவறுகள் என்ற பெயரில் வெளியிட்ட பதிவினை அப்படியே பார்ப்போம்.

* மரம், மின்சார கம்பிகள், கட்டடங்கள் என அனைத்திலும் சகட்டுமேனிக்கு ஏறும் ரசிகர்களை.. கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து தோற்பது.
* விழுப்புரம் மாநாடு நடந்த நேரத்தில்.. இறந்த தொண்டர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறாதது.
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல்.. பனையூர் ஆபீஸ்க்கு வர வைத்தது.
* மீடியாவை ஒருமுறை கூட சந்திக்காமல் தொடர்ந்து தவிர்த்து வருவது.
* மொக்கையான நபர்களை ஆலோசகர்களாக வைத்திருப்பது.
* தவெகவில் இருப்பவர்களில் 95% பேர் ரசிகர்களாக மட்டுமே. பொறுப்புள்ள தொண்டர்களாக மாறவில்லை என்பதை உணராதது.
இவற்றுக்கெல்லாம் முன்மாதிரியாக..
* கோயம்பேடு ரோகிணி தியேட்டர் இருக்கைகள் அனைத்தையும் உங்கள் ரசிகர்கள் நாசம் செய்தபோது.. அதை கண்டிக்காமல் அமைதி காத்தது. அந்த பாதிப்பிற்கு நஷ்ட ஈடு தராதது.
* FDFS நள்ளிரவு காட்சிகளின்போது அசம்பாவிதம் நடக்க வாய்ப்புண்டு என உணர்ந்து.. தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்களிடம் பேசி.. காலைக்காட்சிகள் மட்டுமே போதுமென கூறாதது.
* ப்ளாக்கில் டிக்கட் விற்பனை நடக்கும்போது... என் ரசிகர்கள் யாரும் ப்ளாக் டிக்கட் வாங்க வேண்டாம். அரசு நிர்ணயித்த ரேட்டில் மட்டுமே வாங்குங்கள் என அறிவுறுத்தாதது.
*இந்த சினிமா சார்ந்த விதிமீறல்களுக்கு.. ஒரு கண்டனம் கூற தெரிவிக்காமலும், ரசிகர்களை முறைப்படுத்தாமலும்.. வேடிக்கை பார்த்ததன் பலன்.. அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு அனுபவிக்க வேண்டியுள்ளது.
'இன்னும் ஸ்ட்ராங் ஆக நம் அரசியல் பயணம் தொடரும்' என உங்கள் ரசிகர்களுக்கு செய்தி கூறியுள்ளீர்கள்.
அவர்களை ஒழுங்குபடுத்தாதவரை... தவெக தேர் முன்னோக்கி நகர வாய்ப்பில்லை. இவ்வாறு ப்ளூசட்டை மாறன் கூறியுள்ளார்.
-
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா? -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
தற்குறி கூட்டம், கவர்ச்சி கூட்டம்.. எல்லாத்துக்குமே திமுக காரணமா.. சென்னை மேயர் பிரியா கேள்வி -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு!











Click it and Unblock the Notifications