ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து.. விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாராம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி, அவரது சொத்து மதிப்பு சுமார் 197 கோடி எனத் தெரியவந்துள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் மனைவியின் சொத்து மதிப்பு ரூபாய் 245 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், சசிகலா - ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

aadhav arjuna

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் பெரம்பூரில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தமது வேட்பு மனுவின் பிரமாண பத்திரத்தில், சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ள ஆதவ் அர்ஜுனா அசையா சொத்து மதிப்பு ரூ.17.49 கோடி இருப்பதாக பதிவு செய்துள்ளார். அசையும் சொத்து ரூ.180 கோடி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கையிருப்பு ரொக்கம் ரூ.1.69 கோடி என்றும், வங்கி இருப்பு ரூ.17.53 கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

aadhav arjuna

ஆதவ் அர்ஜூனாவின் 2024 - 25 ஆம் ஆண்டு வருமானம் ரூ.11.10 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.20.50 லட்சம் மதிப்பிலான இன்னோவா கிரிஸ்டா, மாருதி ஆல்பா கார்கள், ரூ.1.12 லட்சம் மதிப்பிலான ராயல் என்பீல்டு பைக் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் பதிவு செய்துள்ளார். 2.29 கோடி ரூபாய் மதிப்புள்ள 1,691 கிராம் தங்க நகைகள் தம்மிடம் இருப்பதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

மேலும், ஆதவ் அர்ஜுனா தன்னுடைய தங்கை சீதாலட்சுமிக்கு 46 கோடி கடனாக கொடுத்து இருப்பதாகவும், விஜய் சேதுபதிக்கு 25 லட்சம் கடன் கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா தான் நடத்தும் voice of commons நிறுவனத்திற்கு மட்டுமே 66 கோடி கடன் கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனாவின் பிரமாண பத்திரத்தில் கரூர் 41 பேர் மரண வழக்கில் தன் மீது BNS 105,110,125(B), 223 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ரூ.1.88 கோடி அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைர்க் தொகை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

aadhav arjuna

ஆதவ் அர்ஜூனாவின் மனைவி டெய்சி (லாட்டரி அதிபர் மார்ட்டின் மகள்) பெயரில் அசையும் சொத்து ரூ.162 கோடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மனைவிக்கு ரூ.26.26 கோடி வங்கிக்கடன் உள்ளது. அவரது பெயரில் ரூ.83.22 கோடி அசையா சொத்துகள் உள்ளன என்றும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜுனாவின் சொத்து மதிப்பு சுமார் 197 கோடி எனத் தெரியவந்துள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் மனைவியின் சொத்து மதிப்பு ரூபாய் 245 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+