செங்கோட்டையன் மூலம் ஓபிஎஸ், டிடிவியுடன் கூட்டு! கொங்கு+டெல்டா ஓட்டுக்களை வளைப்பாரா விஜய்! சாத்தியமா?
சென்னை: கடந்த 20 ஆண்டுகளாக அதிமுகவுக்கு சாதகமாக இருந்த கவுண்டர் மற்றும் முக்குலத்தோர் வாக்குகளை கைப்பற்றும் வாய்ப்பு தவெகவுக்கு அமைந்துள்ளது. இதன் மூலமாக மேற்கு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் திமுகவுக்கு மிகப்பெரிய சவாலை தவெகவால் அளிக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக தேர்தலிலும் திமுக vs தவெக என்று நிலைமை மாறவும் காலம் கணிந்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய காலம் முதலே அக்கட்சியின் தலைவர் விஜய், 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டி திமுக மற்றும் தவெக இடையில் மட்டும்தான் என்று தொடர்ச்சியாக பேசி வருகிறார். தவெக பொதுக்குழு, மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு பயணம் என்று தொடர்ந்து திமுக vs தவெக என்று பேசி வந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பின்னரும் கூடுதல் உத்வேகத்துடன் பேச தொடங்கி இருக்கிறார்.

இந்த 2 ஆண்டுகளில் அதிமுகவை பெரிதாக விஜய் விமர்சிக்கவில்லை. அதேபோல் அதிமுக ஒருபடி மேல் சென்று கரூர் விவகாரத்தில் விஜய்யை காப்பாற்றியது என்றே சொல்லலாம். இப்படியான சூழலில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெக பக்கம் சென்றுள்ளார். இது செங்கோட்டையனுக்கு பெரிய வலிமை இல்லையென்றாலும், தவெகவுக்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் தேமுதிக தொடங்கப்பட்ட போது அரசியல் அனுபவம் பெற்ற பண்ருட்டி ராமச்சந்திரன் விஜயகாந்துடன் இருந்தது மிகப்பெரிய பலனை கொடுத்தது. அதுபோல் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் பெற்ற செங்கோட்டையன் விஜய்க்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் செங்கோட்டையனுக்கு மேற்கு மண்டலத்தின் 4 மாவட்ட பொறுப்புகளும் அளிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் சார்ந்துள்ள கொங்கு வேளாள கவுண்டர் சமுதாய வாக்குகள் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதிகமாக உள்ளன. இதன் மூலமாக தவெக சமூக ரீதியாகவும் அரசியலை அணுக தொடங்கி இருப்பதாக பார்க்கலாம். அதேபோல் எடப்பாடி பழனிசாமி மீது கொங்கு மாவட்டங்களில் இதே சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் செங்கோட்டையன் நிச்சயம் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைக்காத அதிமுக நிர்வாகிகள் செங்கோட்டையனால் தவெக பக்கம் இழுக்க முடியும். ஏனென்றால் தவெகவுக்கு கொங்கு மாவட்டங்களில் பெரிய அடையாளம் இல்லை.
கொங்கு மாவட்டங்களில் உள்ள 68 சட்டசபைத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதே விஜய்க்கு மிகப்பெரிய பணியாக இருக்கும். தற்போது செங்கோட்டையன் அந்த பணியை எளிதாக செய்து முடிக்க வாய்ப்புகள் அதிகம். அதேபோல் ஒரே தொகுதியில் 8 முறை வெல்வது எளிதான விஷயம் அல்ல. கோபிசெட்டிபாளையம் மட்டுமல்லாமல் ஈரோடு முழுக்கவே செங்கோட்டையனுக்கு செல்வாக்கு இருந்தால் மட்டுமே வெல்ல முடியும்.
இதனால் செங்கோட்டையனுடன் இன்னும் சில கொங்கு வேளாள கவுண்டர் தலைவர்கள் இணையும் பட்சத்தில் நிச்சயமாக திமுகவுக்கு சவால் கொடுக்க முடியும். இன்னொரு பக்கம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரும் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளது. இவர்களுக்கு சசிகலாவும் ஆதரவு அளிக்கலாம்.
அப்படி ஆதரவு அளிக்கும் பட்சத்தில் கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் ஆகிய முக்குலத்தோர் சமூக ஆதரவை விஜய் கணிசமாக பெற முடியும். தஞ்சாவூர், திருவாரூர், தேனி, ராமநாதபுரம், கோவில்பட்டி, மதுரை, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் விஜய்யால் மிகப்பெரிய சவாலை திமுகவுக்கு அளிக்க முடியும்.
ஏற்கனவே டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமாகவே இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதிமுக தென் மாவட்டங்களில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதன் மூலமாக விஜய் நினைத்தபடி போட்டியை திமுக vs தவெக என்று மாற்ற முடியும். அதுமட்டுமல்லாமல் கடந்த 20 ஆண்டுகளாக இந்த இரு சமூக வாக்குகளும் அதிமுகவுக்கு பெரும்பான்மையாக சென்று கொண்டிருந்தது.
ஆனால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரின் வெளியேற்றம் மற்றும் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் ஆகியவை முக்குலத்தோர் சமூக மக்கள் எதிர் நிலைப்பாடு எடுக்க காரணமாக மாறியது. தற்போது மேற்கு மண்டலத்தின் முக்கிய முகமான செங்கோட்டையன் தவெகவுக்கு வந்துள்ளதால், விஜய் சொன்னபடி தமிழக அரசியல் களம் திமுக vs தவெக என்று சாத்தியமாக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல்












Click it and Unblock the Notifications