இடைத்தேர்தலில் எக்காரணம் கொண்டும் தவெக வேட்பாளர் வெற்றி பெறக்கூடாது.. பெ சண்முகம் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

மதுராந்தகம்: இடைத்தேர்தலில் எக்காரணம் கொண்டும் தவெக வேட்பாளர் வெற்றி பெறக்கூடாது என சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் கூறியுள்ளார். இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடாது. அதிமுக, திமுக ஒன்று சேர முயன்றது என்றால் சுயேச்சை எம்.எல்.ஏவாக செயல்பட்டு இருக்கலாம். எதற்காக தவெகவில் இணைந்தார்கள். எதற்காக ராஜினாமா செய்தார்கள்.. தவெக வேட்பாளர் வெற்றி பெற்றால் அரசியல் லாபத்திற்காக மீண்டும் ராஜினாமா செய்வார்கள் என கூறியுள்ளார்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. ஆளும் தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியும் கோதாவில் குதித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளரை அறிவித்துள்ளது.

TVK wins the by election many more MLAs will resign CPM Shanmugam Campaign in madurantakam

மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சுகந்தியை ஆதரித்து அக்கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தவெக எக்காரணம் கொண்டும் வெற்றி பெறக்கூடாது என்று கூறினார். பெ. சண்முகம் கூறியதாவது:-

இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடாது. அதிமுக, திமுக ஒன்று சேர முயன்றது என்றால் சுயேச்சை எம்.எல்.ஏவாக செயல்பட்டு இருக்கலாம். எதற்காக தவெகவில் இணைந்தார்கள். எதற்காக ராஜினாமா செய்தார்கள். அதிமுக பிடிக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து விலகியிருக்கலாம். தவெகவில் இணைந்ததன் நோக்கம் ஏதோ ஒரு ஆதாயத்திற்குதான் அவர்கள் அங்கே போய் சேர்ந்தார்களே தவிர கொள்கை, கோட்பாடுகள் அடிப்படையில் அவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறவில்லை. என்ன பேரம் நடைபெற்றது.

என்ன வாக்குறுதி தவெகவினரால் வழங்கப்பட்டது என்பது எல்லாம் இன்னும் ரகசியமாகவே உள்ளது. ஆனால், ஆதாயம் இல்லாமல் அங்கே போய் சேர்ந்து இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பது இந்த தொகுதி 100 சதவீதம் நம்புகிறார்கள். வாக்களித்த மக்களை மதிக்காமல் 20 நாட்களில் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

தவெக வேட்பாளர் வெற்றி பெற்றால் அரசியல் லாபத்துக்காக மீண்டும் ராஜினாமா செய்வார். மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. எந்த வித வரன்முறை இல்லாமல் இஷ்டத்திற்கு ராஜினாமா செய்துவிட்டு பிறகு அதே தொகுதியில் திரும்ப போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ ஆவேன் என்று கேட்பதும் மக்களை கேலிக்குள்ளாக்கக்கூடிய ஒரு விஷயம் ஆகும்" என்றார்.

சட்டமன்ற பொதுத்தேர்தலில் தவெக 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை அக்கட்சிக்கு கிடைக்கவில்லை என்பதால், காங்கிரஸ் , விசிக, ஐயூஎம்.எல், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்.எல். ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளன.

சட்டமன்றத்தை, சட்டமன்றமாக நடத்த வேண்டும் சண்டை மன்றமாக நடத்தக்கூடாது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. கம்யூனிஸ்டு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுக்கு கிடைத்த நேரத்தை பொறுப்பாக பயன்படுத்தி உள்ளனர். எங்களின் பலத்தை அதிகரிக்கவே, தனித்து போட்டியிடுகிறோம். நாடு முழுவதும் இதுவரை நடந்துள்ள எஸ்ஐ.ஆர் சீர்திருத்தத்திற்கு பிறகு, 15 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தேர்தல் ஆணையத்தை, மத்திய அரசின் கைப்பாவையாக மாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்கப்பட வேண்டும். தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுபடி, புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும்.. என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+