வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய்
சென்னை: இந்த மகளிர் தினத்தில் நாம் அனைவரும் உறுதியாக எடுத்து சொல்ல வேண்டியது என்னவென்றால், பெண்களை முதலில் மதிக்க வேண்டும்.. வீட்டு பெண்களை நினைவில் வைக்காமல்.. அவதூறு பரப்புவர்களை வீழ்த்த வேண்டும்.. என விஜய் முன்பாக தவெக பெண் நிர்வாகி இந்திரா தன்ராஜ் பரபரப்பாக பேசினார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று மாலை தவெக மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட விஜய் பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட 12 வாக்குறுதிகள் அடங்கிய தவெக தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார்.

பெண்கள் தின கொண்டாட்டம்
இந்த நிகழ்ச்சியில் தவெக பெண் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவு அனுமதிச் சீட்டு இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் பெண் சாதனையாளர்களுக்கு விஜய் சால்வை அணிவித்தும், வேலுநாச்சியார் புத்தகம் கொடுத்தும், வாட்ச் ஒன்றை கைகளில் அணிவித்து பெருமைப்படுத்தினார்.
வீட்டு பெண்களை நினைவில் வைக்காமல்
அப்போது வழக்கறிஞர் பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இந்திரா தன்ராஜ் பேசும் போது, "இந்த மகளிர் தினத்தில் நாம் அனைவரும் உறுதியாக எடுத்து சொல்ல வேண்டியது என்னவென்றால், பெண்களை முதலில் மதிக்க வேண்டும்..
சும்மா, மேடையில் ஏறி பெண்களை அவதூறாக பேசி, அவமானப்படுத்தி அவர்கள் வீட்டு பெண்களை நினைவில் வைத்துக்கொள்ளாமல், அவதூறு பரப்புகின்ற ஒவ்வொரு ஆண் மகனையும் வீழ்த்த வேண்டும் என்று இந்த சிங்கப் பெண்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த விஜய்யின் முகமும் ஒரு நொடி மாறிப் போனது.
விஜர் ரசிகர்கள், தொண்டர்கள்
விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசியலிலும், விஜய் ரசிகர்கள், தொண்டர்கள் மத்தியிலும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், தன்னை மன ரீதியில் துன்புறுத்தியதாகவும் சங்கீதா கூறியிருந்தார்.
இதனால் சங்கீதாவை விமர்சித்தும் விஜய் ரசிகர்கள் பதிவிட தொடங்கினர். பொதுவாகவே விஜய்யை விமர்சிக்கும் பெண்களை அவர்களது ரசிகர்கள், தொண்டர்கள் கடுமையாக விமர்சிப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த சூழலில் தான் விஜய் மீது விவாகரத்து கேட்ட விவகாரத்தில் சங்கீதா மீதும் எந்த வித புரிதலும் இன்றி விஜய் ரசிகர்கள் சிலர் திட்டி தீர்க்க ஆரம்பித்தனர்.
பெண்களுக்கு சம வாய்ப்பு
இப்படி இருக்கையில், விஜய்யின் கட்சி நிர்வாகி பெண் ஒருவரே, 'வீட்டு பெண்களை நினைவில் வைத்துக்கொள்ளாமல், அவதூறு பரப்புகின்ற ஒவ்வொரு ஆண் மகனையும் வீழ்த்த வேண்டும்' என பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. மேலும் அந்த பெண் கூறுகையில், “பெண்கள் சாதனையை பற்றி இந்த நேரத்தில் நாம் பேசியே ஆக வேண்டும். ஒரு பெண் முன்னேறினால், அந்த சமூகமே முன்னேறும்.. பெண்களுக்கு இப்போது நிறைய இடங்களில் சம வாய்ப்பு கிடைப்பதில்லை.
ஆனால் நம் தலைவர் பாத்தீங்கன்னா, கொள்கை தலைவர்களிலேயே இரண்டு பெண் தலைவர்களை வைத்து இருக்கிறார்.. இதன் மூலம் பெண்களான நமக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்து இருக்கிறார்.. பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைக்க சூழலை உருவாக்குவது நமது உரிமை.. பெண்கள் முன்னேறினால் நாடு முன்னேறும்" என்று கூறினார்.
-
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
விஜய்க்கு அடுத்த அக்னி பரீட்சை.. அமைச்சர்களுக்கு முக்கிய அசைன்மென்ட்! இடைத் தேர்தலுக்கு ரெடியான தவெக -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
“வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்கின்றனர்” - மின்வெட்டுக்கு அமைச்சர் சொன்ன பகீர் காரணம்! -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
"தமிழகத்தில் அண்ணாமலைக்கும் மன்சூர் அலிகானுக்கும் தான் போட்டி!" நக்கலடித்த தவெக எம்எல்ஏ முஸ்தபா












Click it and Unblock the Notifications