பூஸ்ட் தரீங்களா? நாங்க ஏற்கெனவே ஹார்லிக்ஸ் சாப்பிடுறோம்! TVK கூட்டணி குறித்து காங்கிரஸ் சொன்ன பதில்!
சென்னை: விஜய்யுடன் கூட்டணிக்கு வந்தால காங்கிரஸ் கட்சிக்கு பூஸ்ட் கிடைக்கும் என்று இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், நாங்க ஏற்கெனவே பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம் குடிச்சிட்டுதான் இருக்கிறோம் என்று விமர்சித்திருக்கிறது.
கூட்டணியில் பங்கு என்று அறிவித்தும், இன்னும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் எந்த கட்சியும் இணையவில்லை. இப்படி இருக்கையில், காங்கிரஸ் கூட்டணிக்கு வரும் என்று தவெக காத்துக்கிடக்கிறது. இதனை வெளிப்படையாகவே பேசியுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது என்ன?
"தவெகவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்று தேய்ந்து போய் இருக்கிறது. காரணம் என்ன? ஏனென்றால் பவர் இல்லை. ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவு கொடுத்து ஆதரவு கொடுத்து காங்கிரஸ் கட்சி தேய்ந்து கொண்டே செல்கிறது. அந்தவொரு பவரை பூஸ்ட்டை நாங்கள் கொடுக்கிறோம். பவருக்கு வந்தால், காங்கிரஸ் கட்சியால் வரலாற்றை தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வாய்ப்பை காங்கிரஸ் கட்சி தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார்.
தமிழ்நாடு அரசியல்
விரைவில் சட்டமன்ற தேர்தல் தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்கை இறுதி செய்து வருகின்றன. ஒருபுறம் என்டிஏ கூட்டணி அதிமுக, பாமக, அமமுக என முக்கிய கட்சிகளை ஒருங்கிணைத்திருக்கிறது. அதேபோல மறுபுறம் இந்தியா கூட்டணி கடந்த முறை இருந்த கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. ஆனால் தவெக மட்டும் இன்னும் போனி ஆகாமல் இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அறிவிக்கப்பட்டபோது, ஆஹா ஓஹோ என்று பேசப்பட்டாலும் அதன் பின்னர் எந்த கட்சியும் தவெகவை கண்டுக்கொள்ளவில்லை.
செல்வப்பெருந்தகையின் பதில்
இப்படி இருக்கையில் எஸ்.ஏ.சந்திசேகரின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்திருக்கிறார்.
அவர் கூறியதாவது, "நாங்கள் ஏற்கெனவே பூஸ்டில்தான் இருக்கிறோம். ராகுல் காந்தி எங்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்வீட்டா ஆகியவற்றை கொடுத்திருக்கிறார். இருப்பினும் எங்களுக்கு பூஸ்ட் கொடுக்கிறேன் என்று சொன்னதுக்கு நன்றி" என்ற சிம்பிளாக முடித்துக்கொண்டார்.
காஙகிரஸின் பேச்சு
காங்கிரஸின் நிர்வாகிகள் விஜய்யுடன் பேசியது உண்மைதான். ஆனால், நாங்கள் கூட்டணி குறித்தெல்லாம் பேசவில்லை என்று கூறிவிட்டனர். அதெபோல ஜனநாயகன் திரைப்படத்திற்கு அதிகம் குரல் கொடுத்திருந்தனர். அதுவும் அரசியல் நோக்கத்திற்கு கிடையாது என்பதையும் உறுதி செய்திருக்கின்றனர்.
இப்படி இருக்கையில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சும், அதற்கு செல்வப்பெருந்தகையின் பதிலும் கவனம் பெற்றிருக்கிறது.
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications