தவெக தொண்டருக்கு நடுரோட்டில் நடந்த வளைகாப்பு.. புஸ்ஸி ஆனந்த் செய்த செயல்.. கோஷ்டி பூசலால் டென்ஷன்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தவெக தொண்டருக்கு சாலையின் நடுவே நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு வளையல் அணிவித்து ஆசீர்வாதம் செய்த வீடியோ சோசியல் மீடியாவ்ல் ட்ரெண்டாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக கோஷ்டி பூசல் இருந்து வருவதால், புஸ்ஸி ஆனந்தின் கவனத்தை ஈர்க்க சாலையின் நடுவே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
தவெக செயற்குழு கூட்டம் ஜூலை 4ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான பணிகளில் தவெக தலைவர் விஜய் தீவிரமாக இருக்கிறார். அதேபோல் தவெகவின் கட்டமைப்பு பணிகளில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வேகமாக இயங்கி வருகிறார். ஏற்கனவே தவெக சார்பாக பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சங்கரன்கோவியில் நடக்கவுள்ள நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வழியாக வந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்தனர். மேக தாளங்கள் முழங்க, மலர்களை தூவி புஸ்ஸி ஆனந்திற்கு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கழுகுமலை பகுதிக்கு புஸ்ஸி ஆனந்த் வந்த போது, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கர்ப்பமாக இருந்த தவெக தொண்டரான சுதா என்பவருக்கு சாலையின் நடுவிலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பார்த்த புஸ்ஸி ஆனந்த், உடனடியாக காரில் இருந்து இறங்கி அவருக்கு வளையல்களை மாட்டிவிட்டு ஆசீர்வாதம் செய்து வாழ்த்தினார்.
புஸ்ஸி ஆனந்தின் இந்த செயல்பாடுகள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. வழக்கமாகவே தவெக நிகழ்ச்சிகள் எதுவும் இல்லாத நேரத்தில் ஆட்டோ வழங்குவது, நிழற்குடை வழங்குவது என்று ஏராளமான செய்து கொண்டே இருப்பார். புஸ்ஸி ஆனந்தின் இந்த செயல்பாடுகள் விளம்பர பிரியர் என்ற பெயரை அவருக்கு பெற்று கொடுத்துவிட்டது.
இதனால் தவெக தொண்டருக்கு வளையல் அணிவித்து ஆசீர்வாதம் செய்த விவகாரமும் விளம்பரத்திற்காக செய்யப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் தவெக நிர்வாகிகளிடையே தீவிரமாக கோஷ்டி பூசல் நடந்து வருகிறது. இதனால் புஸ்ஸி ஆனந்தின் கவனத்தை திருப்புவதற்காக இதுபோன்ற செயல்களில் அக்கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
-
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
வாழ்க்கை ஒரு வட்டம் சார்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ.. தவெக தொண்டர்களின் மீம்ஸ்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
குதிரை பேரமல்ல! யானை பேரம்! தவெகவில் அதிமுகவினர் இணைவதற்கு இபிஎஸ்தான் காரணம்! ஆதவ் அட்டாக் -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்










Click it and Unblock the Notifications