மனச் சிக்கலில் சீமான்.. டெல்லி ஸ்கிரிப்ட்.. விஜய் போபியா.. வெளுத்த வேல்முருகன் கட்சி உதயகுமாரன்!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விஜய் போபியா எனும் நோய் பாதிப்பு உள்ளது; அவருக்கு மனச் சிக்கல் இருக்கிறது; டெல்லி அனுப்பிய ஸ்கிரிப்ட் படி செயல்படுகிறார் என்று பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.வின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகி சுப. உதயகுமாரன் விளாசியிருக்கிறார்.
இது தொடர்பாக சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளதாவது: அரசியல் என்பது முன்னோக்கிச் செல்லும் ஓர் இலட்சியப் பயணம். முன்னாளில் வழிநடத்திய தலைவர்களிடமிருந்து இந்நாளில் கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு, தள்ள வேண்டியவற்றைத் தள்ளி முன்னேறிச் செல்வதுதான் அறிவுடைமை!

காந்தி, அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராசர், ஜீவா என எந்த தலைவராக இருந்தாலும், எவ்வளவு பெரியத் தலைவராக இருந்தாலும், முரண்களே இல்லாத, முற்றிலும் சொக்கத்தங்கமான அற்புத, அதிசய, அமானுட ஆளுமையை எங்கும் காணவியலாது.
பாழும் பார்ப்பனியம் திட்டமிட்டு தமிழர்களை அடிமைப்படுத்த ஆவன அனைத்தும் செய்து கொண்டிருக்கிறது. அந்த பயங்கரவாதப் பார்ப்பனியம் பார்த்து பயப்படுகிற ஒரு தலைவர் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி தேவையற்றக் கூக்குரல் எழுப்பி குழப்பம் விளைவிக்கிறார் சீமான். இது தில்லியிலிருந்து அனுப்பப்பட்ட ஸ்கிரிப்ட். விஜய் போபியா எனும் நோயின் வினோத வெளிப்பாடு.
சீமான் பேசியிருக்கும் பேச்சுக்களை உற்றுநோக்கினால், இவருக்கு ஓர் ஆழமான மனப்பிரச்சினை இருப்பது தெளிவாகத் தெரியும்.
சிங்களவர்களின் வன்கொடுமைகளை நேரில் எதிர்கொண்ட எந்த ஈழத் தமிழர் தலைவரும் "சிங்களப் பெண்களை கற்பழிப்பேன்" என்று பேசவில்லை. இவர் பேசினார்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக ஆண்டுக்கணக்காகப் போராடிய நாங்களும், மற்றவர்களும் அணுஉலைகள் பற்றி ஆயிரம் விடயங்கள் பேசினோம். ஆனால் சீமான் மட்டும்தான் "ஆணுறை தயாரிக்கத் தெரியாத நாட்டுக்கு அணுஉலை எதற்கு?" என்று "அந்த கோணத்திலிருந்து" கேள்வி எழுப்பினார்.
பெரியார் சொன்ன பல்வேறு கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு, உடலுறவு பற்றி உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறார் சீமான். பெண்களை வெறுக்கும், பெண்களைக் கண்டு அஞ்சும், பெண் விடுதலையை எதிர்க்கும் காவி கோஷ்டிகள் இவருடன் சேர்ந்து பஜனை பாடுகிறார்கள்.
இந்த சகோதரருக்கு மனநல மருத்துவம் அவசரமாகத் தேவைப்படுகிறது. தொன்மையும், பெருமையும், தொலையாச் சிறப்புகளும் கொண்டிருக்கும் தமிழினத்தை வழிநடத்திச் செல்ல எந்தவிதமானத் தகுதிகளோ, திறமைகளோ இல்லாதவர் சீமான்.
இவரை தமிழ்த்தேசியத்தின் முகமாகக் கொண்டு, இவருக்கு வக்காலத்து வாங்கும் அன்பும், பண்பும் கொண்ட தோழர்கள் சற்றே சிந்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி! இவ்வாறு சுப. உதயகுமாரன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
வரலாறு தெரியாம தப்பு தப்பா பேசாதீங்க.. மருத்துவ படிப்பு விவகாரம்.. உதயநிதிக்கு அருண்ராஜ் பதில் -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
மக்களுக்கு குட் நியூஸ்! இனி மின்சார கட்டண அபராதம் தவிர்க்கலாம்.. ஒரு முறை பதிவு செய்தால் போதும்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications