இவருமா.. மொத்தமாக திமுகவிற்கு தாவிய 'முக்கிய புள்ளிகள்'.. மாறிய காட்சிகள்
சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன்,டேவிட் செல்வன் உள்பட 20 பேர் இன்று திமுகவில் இணைந்தனர்
சசிகலா உடன் தொலைப்பேசியில் பேசியதாக பல்வேறு நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். சமீப காலங்களில் மட்டும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்பட பலர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன், டேவிட் செல்வன், கோபி நகர அதிமுக செயலாளர் காளியப்பன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ
முன்னாள் எம்எல்ஏக்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் ஆகியோர் அதிமுகவில் இருந்து அமமுகவில் சேர்ந்து தற்போது அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மானாமதுரை (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.மாரியப்பன் கென்னடி போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மாரியப்பன் கென்னடி

அமமுகவில் இணைந்தார்
இவர் ஜெயலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக டிடிவிக்கு ஆதரவு தெரிவித்து அமமுகவில் இணைந்தார். அவர் அமமுக மாநில செய்தி தொடர்பாளராகவும் அந்த கட்சியின் அம்மா பேரவை மாநில செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

மீண்டும் தோல்வி
கடந்த 2019 ஆம் ஆண்டு மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட மாரியப்பன் கென்னடி தோல்வியடைந்தார். அதன்பின் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் அமமுக சார்பில் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாரியப்பன் கென்னடி வெற்றி பெறவில்லை

அமமுகவை ஏற்கவில்லை
இதனால் அரசியலில் அடுத்த அத்தியாயத்தை துவங்க விரும்பயி மாரியப்பன் கென்னடி சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து மாரியப்பன் கென்னடி கூறுகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன். முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி தருவார் என மக்கள் நம்புகின்றார்கள் என்றார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்










Click it and Unblock the Notifications