#ReleaseNandhini நந்தினியை விடுதலை செய்.. இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
நந்தினியை விடுதலை செய்ய கோரி, ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது
சென்னை: அடுத்த வாரம் கல்யாணம் நடைபெறவுள்ள நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நந்தினியை விடுதலை செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் #ReleaseNandhini ஹேஷ் டேக்கில் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்ப்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக தனது தந்தை ஆனந்துடன் சேர்ந்து போராடி வருபவர் நந்தினி. இவர் ஒரு வக்கீல்!

2014-ம் ஆண்டு டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் திருப்பத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குறுக்கு விசாரணையின்போது, "டாஸ்மாக்கில் விற்பனை செய்வது போதைப் பொருளா? உணவுப் பொருளா? இல்லை மருந்து பொருளா?, IPC 328ன் படி டாஸ்மாக் மூலம் போதைப் பொருள் விற்பது குற்றமில்லையா? என்று நந்தினி வாதாடினார். இதனால், இது போன்ற கேள்விகளை எழுப்ப மாட்டோட்ம என்று எழுதி கையெழுத்து போட்டு தருமாறு நீதிபதி கேட்டார். ஆனால் நந்தினியும், அவரது தந்தையும் எழுதி கொடுக்க மறுத்தனர். இதனால்
நீதிமன்ற அவமதிப்பு என்று கூறி இருவரையும் கைது செய்து, வருகிற 9-ம தேதி வரை மதுரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. வருகிற 5-ம் தேதி நந்தினிக்கு கல்யாணம் ஆக உள்ள நிலையில், வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கைது நடவடிக்கை உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.
இதையடுத்து, நந்தினியை விடுதலை செய்யவேண்டும் என்று சோஷியல் மீடியாவில் #ReleaseNandhini என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் இந்த ஹேஷ்டேக்கில், நந்தினிக்கு ஆதரவான கருத்துக்களை பலர் பதிவிட்டு வருகிறார்கள். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications