15 வயசில் ஒருத்தர்.. 17 வயசில் இன்னொருத்தர்.. பிஞ்சுலேயே திருமணம் செய்து.. கோவை கொடுமை..!
17 வயது சிறுமியை திருமணம் செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்
சென்னை:17 வயதே ஆன இளம்பெண் 2 பேரை கல்யாணம் செய்து குடும்பம் நடத்திய நிலையில், அந்த 2 கணவன்களையுமே போலீசார் தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.
கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த பெண் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. கடந்த 2018ல் இவருக்கு வீட்டில் கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.. அப்போது ரம்யாவுக்கு வயசு வெறும் 15தான்.

மாப்பிள்ளை திண்டுக்கல்லில் வெல்டிங் வேலை பார்ப்பவராம்.. வீட்டில் செய்து வைத்த திருமணம் என்பதால், ரம்யாவும் எதையுமே வாய் திறந்து மறுப்பு சொல்லவில்லை.. இதனைத் தொடர்ந்து தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் ரம்யாவின் சொந்தக்காரர் ஒருவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால், வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு உதவியாக ரம்யா அந்த ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருந்தார்.. அப்போது அதே ஆஸ்பத்திரியில் முத்தூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சிவாவும் விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அந்த நேரத்தில் ஆஸ்பத்திரியிலேயே ரம்யாவுக்கும் சிவாவுக்கும் லவ் வந்துவிட்டது.. ஒருத்தருக்கொருத்தர் செல்போன் நம்பர்களை தந்ததுடன், டிஸ்சார்ஜ் ஆகி வந்தும் நேரில் சந்தித்து பேசி கொண்டனர்.. கள்ளக்காதலும் வளர்ந்தது.
இந்த விஷயம் கணவனுக்கு தெரிந்துவிட்டது.. அதனால் ரம்யாவை கண்டித்துள்ளார்.. இதனால் கோபப்பட்ட ரம்யா, அங்கிருந்து கோபித்து கொண்டு, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. கோவை சரவணம்பட்டிதான் அம்மா வீடு இருக்கிறது.. ஒருநாள் திருந்தி வருவார் என்று நினைத்து கணவனும் விட்டுவிட்டார்.
ஆனால் அடுத்த சில நாட்களில் ரம்யாவை காணோம்.. பல இடங்களில தேடி பார்த்தும் கிடைக்காததால், ரம்யாவின் பெற்றோர் சரவணம்பட்டி போலீசில் புகார் தந்தனர்.. அந்த புகாரின்பேரில்வழக்கு பதிவு செய்த போலீசாரும் ரம்யாவை தேடிவந்தனர்.. அப்போதுதான் கொடைக்கானல் பகுதியில் அவர் இருப்பதாக தெரியவந்தது.
விரைந்து சென்ற போலீசார், மஞ்சூர் பகுதியில் லாரி டிரைவர் சிவாவுடன் குடித்தனம் நடத்தி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. ரம்யாவை கடத்தி சென்று அவர் 2-வது கல்யாணம் செய்துள்ளார்.. இதையடுத்து ரம்யாவை மீட்டதுடன், சிவாவை கைது செய்தனர்.. இது சம்பந்தமாக விசாரிக்கும்போது, ரம்யாவுக்கு இப்போதுதான் 17 வயதாகிறது என்பது தெரியவந்தது.
இதையடுத்து வழக்கு ராமநாதபுரம் மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது.. பின்னர், 15 வயசிலேயே கல்யாணம் செய்து வைத்த ரம்யாவின் பெற்றோர் முதல் கணவன் மீதும், மற்றும் 17 வயதில் கல்யாணம் செய்து கொண்ட சிவாவின் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், 2 கணவன்களையும் போக்சாவில் கைது செய்து கோவை ஜெயிலில் தூக்கி உள்ளே வைத்துள்ளது!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications