‘அது அவரது சொந்த கருத்து’ஆமா.. இது அதுல்ல? பாஜகவால் ரெண்டாகும் அதிமுக? முட்டி மோதும் மாஜிக்கள்..!?
சென்னை: மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர் எதிர்பார்த்தது போலவே அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களிடையே லேசான வார்த்தை போர் ஏற்பட்டிருக்கிறது. கூட்டணி தொடர்பாக எஸ்பி வேலுமணியும் ஜெயக்குமாரும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து இருப்பது அதிமுகவுக்குள் இருந்த புகைச்சலை வெளியே கொண்டு வந்திருப்பதாக கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்..
மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வெற்றியை வைத்து ஆட்சி அமைக்கிறது பாஜக. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தான் ஐந்தாண்டுகளையும் கடத்த வேண்டிய நிலைமை அந்த கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் மோதலை சந்தித்து இருந்தாலும் இந்த தேர்தலில் மோடியின் ஆதரவு தான் தன் வெற்றிக்கு காரணம் என சந்திரபாபு நாயுடு பேசியது பாஜகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. நிதிஷ்குமாரும் அதே பாணியில் பேசி பாஜகவினருக்கு ஆறுதல் அளித்திருக்கிறார்.
நம்பிக்கையுடன் பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை அரசியல் களம் சூடாகவே இருக்கிறது. பெரு வெற்றி பெற்ற மகிழ்வில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இருக்கின்றன. எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் எங்கள் வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது என பாஜகவினர் பெருமை பேசி வருகின்றனர். ஆனால் அண்ணாமலைக்கு எதிராக பாஜகவில் மூத்த தலைவர்கள் கொண்ட எதிர் அணி உருவாகி இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. பல தலைவர்கள் அண்ணாமலைக்கு எதிராக தற்போது பேசி வருகின்றனர்.
பரிதாபகரமான நிலையில் இருப்பது அதிமுக தான்.. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை இழந்தாலும் 60க்கும் மேற்பட்ட இடங்களை பெற்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. ஆனால் மக்களவை தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க வேண்டி இருந்தது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததோடு ஒரு சில தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கும் நான்காம் இடத்துக்கும் தள்ளப்பட்டதோடு டெபாசிட்டையும் பறிகொடுத்து இருக்கின்றனர் அதிமுக வேட்பாளர்கள். எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோற்று இருப்பது அவருக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.
தனது தலைமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார். குறிப்பாக பல தொகுதிகளில் மூத்த முன்னாள் அமைச்சர்கள் வேலை செய்யாதது கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதை அவர் உணர்ந்திருக்கிறார். இன்று அதிமுக கூட்டம் கூட இருக்கும் நிலையில் அது பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கணித்தது போல தேர்தலுக்கு பிந்தைய நிகழ்வுகளில் அதிமுகவில் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
பாஜகவோடு கூட்டணியே கிடையாது என அதிமுகவினர் கூறிவந்த நிலையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என பேசினார். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் அது அவரது தனிப்பட்ட கருத்து, அது அதிமுகவின் கருத்து அல்ல.. அனுமானத்தின் அடிப்படையில் கூறும் கருத்துக்களுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என பேசி இருக்கிறார்.
அதிமுகவில் ஓபிஎஸ் அணியினர் பேசிய போதெல்லாம் அது அவர்களது சொந்த கருத்து என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து விவகாரம் பெரிதாகி ஒரு வழியாக அதிமுக இரண்டாக உடைந்து ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் தொண்டர்கள் என ஒரு அணியாக வெளியேறிவிட்டனர். இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் தோல்வி எதிரொலியாக அதிமுகவில் மீண்டும் அதே போல ஒரு பிரச்சனை உருவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்த ஒரு சில மூத்த முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் பிரச்சனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று கூடும் கூட்டம் அதிமுகவில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிமுகவில் ஏதாவது ஒரு பிரளயம் ஏற்படுவதற்கு முன்னதாக ஒரு மூத்த நிர்வாகி ஒரு கருத்தை தெரிவிப்பார். உடனே எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அது அவரது சொந்த கருத்து கட்சியின் கருத்தல்ல இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்பார்கள்.. அதன் பிறகு விவகாரம் பெரிதாகும்.. இந்நிலையில், தற்போதும் அதே போன்ற ஒரு கருத்தை எஸ்பி வேலுமணி முன்வைக்க வழக்கம் போல் அதனை மறுத்திருக்கிறார் ஜெயக்குமார். இது அதிமுகவில் ஏதோ ஒரு பிரச்சனைக்கான ஆரம்ப புள்ளியாக இருக்கலாம்.. அது பெரிதாகிறதா? அல்லது அப்படியே அடங்கி போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி












Click it and Unblock the Notifications