எந்த சூழ்நிலையிலும்.. எந்த மாற்றத்தையும்.. தமிழக அரசு ஏற்காது! ஆளுநர் உரையில் இருந்த அந்த விஷயம்
சென்னை: இரு மொழிக் கல்வித் திட்டத்தில் எந்தச் சூழ்நிலையிலும் எந்த மாற்றத்தையும் அரசு ஏற்காது என ஆளுநர் வாசிக்கவிருந்த உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடப்பாண்டின் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கப்படவிருந்த இந்த கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைக்கவில்லை என கூறி ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார்.

இந்த நிலையில் ஆளுநர் ஏன் வெளியேறினார் என்பது குறித்து ராஜ்பவன் விளக்கமளித்துள்ளது. அதில் ஆளுநர் பேச முயன்ற போது அவருடைய மைக் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அது போல் ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்தன என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியால் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி, இதுவரை இல்லாத அளவிற்கு எட்டி உள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2.23 குடும்பங்கள் பயன் பெறும் வகையில் தலா 3,000 ரூபாய் ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; இடைநிற்றல் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் நாட்டிலேயே உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
மகளிர் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அளப்பரிய பல சாதனைகளை செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 1.30 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பணிபுரியும் மகளிருக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தோழி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதன் பயனாக, இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் தமிழ்நாட்டு பெண்கள் எண்ணிக்கை 40.3% ஆக உயர்ந்துள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு இயக்கம், திராவிட மாடல் ஆட்சியில் ஆல்போல் தழைத்து, இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4.9 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட "கலைஞர் கனவு இல்லம்" திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ரூ.900 கோடி செலவில் அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 36 கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4,432 பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான குடிநீரை, தனிப்பட்ட குழாய் இணைப்புகள் மூலம் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், மாநில அரசின் நிதியிலிருந்து மட்டும் 1 கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.3,112 கோடி நிதி இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் புதிய திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதில்லை.
திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பழங்குடியின மக்களுக்காக ரூ.315 கோடி செலவில் 7,255 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
சிறப்பு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.140 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
'காலனி' என்ற சொல் நீக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டத்தால் 19 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2172 கோடியில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 41 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை செம்மஞ்சேரியில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது வருத்தமளிக்கிறது. மெட்ரோ ரயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
என்றுமே இருமொழிப் பாடத்திட்டமே தமிழ்நாட்டின் கொள்கை என்பதை, திராவிட மாடல் அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை உறுதியாக எடுத்துரைக்கிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரப் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 3,631 மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.
அது போல் அந்த உரையில் 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த இரு மொழிக் கல்வித் திட்டத்தை இரு கண்களை போல காத்து வருகிறோம். எந்தச் சூழலிலும் இந்த கொள்கையில் எந்த மாற்றத்தையும் தமிழக அரசு ஏற்காது என சட்டசபையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications