இறங்கி வந்து வேலை பாரு.. சென்னை வெள்ளத்திற்கு இடையே.. திடீரென டிரெண்டான கமல்ஹாசனின் 2 வீடியோ.. ஏன்?
சென்னை: சென்னையில் பெய்த கனமழை அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் ஆகியவைக்கு இடையே நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. சென்னை கால்வாய்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. இதனால் மழை நீர் வடிகால் அமைப்புகள் இருந்தும் கூட தண்ணீர் வெளியேறும் வழி இல்லாமல் உள்ளது. தண்ணீர் ரிவர்ஸ் ஆக கூடாது என்பதால் வடிகால்கள் தற்போது மூடப்பட்டு உள்ளன.

இதனால் இப்போதைக்கு சாலைகளில் தேங்கி உள்ள தண்ணீர் வெளியேறும் வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் சாலைகளில் ஓடும் தண்ணீர் அளவு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
சென்னை மழை: சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் வெள்ளம் வடிந்து உள்ளது . ஆனால் வேளச்சேரி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியவில்லை.
சென்னையில் உள்ள பல்வேறு அப்பார்மென்டுகள் இதனால் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. நகரத்தில் இருக்கும் வீடுகள் தப்பித்து விட்டாலும், வெளியே ஏரிகளுக்கு அருகே கட்டப்பட்டுள்ள அபார்ட்மெண்டுகள் கடுமையாக தத்தளித்து வருகின்றன. அதிலும் பிரபல அபார்ட்மெண்ட் ஒன்றில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை மழை வெள்ளம் அடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளிக்கரணை பகுதியில் அமைந்து உள்ள குடியிருப்பு ஆகும் இது.
சிட்டிபாபு நகருக்கு அருகே இந்த அபார்ட்மெண்ட் அமைந்து உள்ளது. பள்ளிக்கரணை ஏரிக்கு அருகே இந்த அபார்ட்மெண்ட் அமைந்து உள்ளது. இந்த அபார்ட்மெண்ட் கீழ் பார்க்கிங் தளத்தில் தண்ணீர் புகுந்து உள்ளது. ஏரி முழுமையாக நிரம்பி.. அங்கே எல்லை உடைந்து அப்படியே தண்ணீர் வெளியேறி அபார்ட்மெண்ட் உள்ளே வந்துள்ளது.
கீழே இருந்த பல கோடி மதிப்பிலான கார்கள் அப்படியே தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தின் கொடூர காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கார்கள் அப்படியே இழுத்து செல்லப்படும் காட்சிகள் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளன. நெட்டிசன்கள் பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர். 2015க்கு பிறகு மிக பெரியளவில் இப்போது மழை பெய்துள்ளது. மழை இன்னும் விடாத காரணத்தால் மொத்தமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
டிரெண்டிங் வீடியோ: சென்னையில் பெய்த கனமழை அதை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் ஆகியவைக்கு இடையே நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி "எரி குளம் நதியை கூட ப்ளாட்டு போட்டு வித்தாக்கா...
நாறி பூடும் ஊரு ஜனம் சின்ன மழ வந்தாக்கா...
ஒய்யாரமா தலுக்கா ஒதுங்கி போற கண்ணால...
எறங்கி வந்து வேல பாரு நாடு மாறும் தன்னால...
என்ற வரிகள் கொண்ட கமலின் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
ஸ்டிக்கர் ஒட்டியது: அதோடு 2017ல் 2015 வெள்ளம் குறித்து கமல் பேசிய வார்த்தைகளும் டிரெண்டாகி வருகின்றன. 2015 வெள்ளத்தின் கமல் ரசிகர் மன்றம் உதவிகளை செய்தது. ஆனால் அப்போதைய ஜெயலலிதா அரசு அதில் ஜெயலலிதா புகைப்படங்களை ஒட்டியது என்று விமர்சனம் செய்து அளித்த பேட்டியும் கூட இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications